நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்… கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் போது நடந்த விபரீதம் …

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லம், சிஐடி நகர் இல்லம் மற்றும் ராஜாஜி ஹால் போன்ற இடங்களில் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தேவ கவுடா உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், பொது மக்களும் தொண்டர்களும் கருணாநிதியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கருணாநிதியின் உடல், அறிஞர் அண்ணா நினைவரங்க வளாகத்திலேயே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் உடல் ராஜாஜிஹாலில்வைக்கப்பட்டிருந்தபோதுபல்லாயிரக் கணக்கானமக்கள்அஞ்சலிசெலுத்தவந்திருந்தனர். அப்போதுசிலர்சுவர்ஏறிகுதித்துஅவரின்உடலுக்குஅஞ்சலிசெலுத்தஉள்ளேவரமுற்பட்டனர்.

இதனால்கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் படுகாணமடைந்தது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின், அவரதுமகன்உதயநிதிஸ்டாலின்ஆகியோர்நேரில்சென்றுஆறுதல்தெரிவித்தனர்மேலும் அவர்களது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். காயமடைந்தவர்களுக்கு பழங்கள் மற்றும் உதவித் தொகையையும் ஸ்டாலின் வழங்கினார்