proud of india will start from tamilnadu said kamal

என் ஆயுள் முடிவதற்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன் என கமல்ஹாசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ம் தேதி அவர் பிறந்த ராமநாதபுரம் மண்ணிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்தில் அரசியல் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கமல் அறிவித்துள்ளார்.

அதற்கான முன்னோட்டமாக ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 தென் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு கமல் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 இந்நிலையில், வேளச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், தமிழகத்தில் கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து ஆகிய சேவைகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. அவற்றை எல்லாம் டிஜிட்டல்மயமாக்கி முறைப்படுத்துவேன். என் ஆயுள் முடிவதற்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன். இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும் என கமல் தெரிவித்தார்.