Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று.. சுகாதாரத்துறை வெளியிட்ட பகீர் தகவல்.

உடனே திருச்சூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 3 வார சிகிச்சைக்குப் பின்னர் அதாவது 2020 பிப்ரவரி 20 அன்று அவர் குணமடைந்து வீடுதிருப்பினார்.

Indias first corona patient gets corona infection again. shocking.
Author
Chennai, First Published Jul 13, 2021, 5:11 PM IST

இந்தியாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 150 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியுள்ளது, இதுவரை உலக அளவில் இந்த வைரஸால் 40.55 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருந்து வருகிறது. 

Indias first corona patient gets corona infection again. shocking.

கடந்த சில மாதங்களாக உச்சத்திலிருந்த கொரோனா இரண்டாவது அலை தற்போது படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இன்னும் சில மாதங்களில் மூன்றாவது அலை தாக்கக்கூடும் என நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜனவரி 30ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மாணவி ஒருவருக்கு முதன் முதலில் வைரஸ் தொற்று இருப்பது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவி சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில் மூன்றாமாண்டு மருத்துவம் பயின்று வந்தவர் ஆவார். இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நிறைவு செய்திருந்த அவர் சீனாவில் வைரஸ் உச்சகட்டம் அடைந்தபோது இந்தியா திரும்பினார். அப்போது நாட்டிலேயே முதன் முதலில் அவருக்குதான் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Indias first corona patient gets corona infection again. shocking.

உடனே திருச்சூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 3 வார சிகிச்சைக்குப் பின்னர் அதாவது 2020 பிப்ரவரி 20 அன்று அவர் குணமடைந்து வீடுதிருப்பினார். இந்நிலையில் தற்போது அந்த மாணவிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் முதல் கோவிட் நோயாளி மீண்டும் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ளார் திருச்சூர் மருத்துவமனையில் டிஎம் டாக்டர் கே.ஜே ரீனா அந்த குறிப்பிட்ட மாணவி மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது RT-PCR பரிசோதனை அறிக்கையில் அது உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஆன்டிஜன் அறிக்கையில் தோற்று இல்லை என வந்துள்ளது, ஆனால் அவருக்கு எந்த தொற்று அறிகுறிகளும் தென்படவில்லை. அந்த மாணவி புதுடெல்லிக்கு படிப்பதற்காக செல்ல தயாராகி வந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட RT-PCR பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பெண் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios