கியூபா , சீனா போன்ற நாடுகளின் பாணியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  பிளாஸ்மா சிகிச்சை முறையில் சிகிச்சை அளிக்க இந்தியா மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.  இந்நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக கேரளா கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்த முன்வந்துள்ளது . இந்நிலையில்  கேரள மாநிலத்திற்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்த  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.   இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரையில் 9 ஆயிரத்து  205 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  இந்த வைரசுக்கு இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 1,080 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் .  மருத்துவமனையில் 7294 பேருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது  . இந்நிலையில்  இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது . 

எனவே ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன ,  இந்நிலையில் இந்த வைரஸுக்கு சிகிச்சையளிக்க  பிரத்தியேக தடுப்பூ உள்ளிட்ட மருத்துகள்  இல்லாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை என்ற  முறையை பயன்படுத்த இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் திட்டமிட்டுள்ளன . கியுபா, சீனா போன்றநாடுகள் இந்த சிகிச்சை முறையை கடைபிடித்து வெற்றியும் கண்டுள்ளன என்பது கூடுதல்தகவல்,  இந்தியாவில்  முதன்முறையாக கேரளா பிளாஸ்மா சிகிச்சை முறையை முன்னெடுத்துள்ளது .  அதாவது குணமடைந்தவர்கள் இரத்தத்தை பயன்படுத்தி அதிலிருந்து வெள்ளை அணுக்கள் மற்றும் சிவப்பணுக்களை பிரித்தெடுத்து அதில் மீதமிருக்கும் பிளாஸ்மா என்ற திரவத்தை நோய்  பாதித்தவர்களுக்கு செலுத்துவதன் மூலம் அவர்கள் விரைவில் குணப்படுத்த முடியும் என்பதே பிளாஸ்மா சிகிச்சை முறையாகும்.  இந்த சிகிச்சை முறையில் 90 சதவீதம் நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்பதால்,  இந்த முறையில் தங்களது நாட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்க பல உலக நாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன .  

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா பிளாஸ்மா என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மற்றொரு வாய்ப்பாக கருதப்படுகிறது .  அதாவது கொரோனாவால் குணமடைந்த நோயாளிகளின் உடல் இயற்கையாகவே நோயை எதிர்த்துப் போராடும் ஆற்றலை பெற்றிருக்கும் .  எனவே அந்த நபர்களின்  ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகளை எடுத்து அதை நோய் பாதித்த நபர்களுக்கு செலுத்தும்போது  அவர்கள்  நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்று நோயிலிருந்து குணமடைகின்றனர்,  இந்நிலையில் நோயிலிருந்து குணமானவர்களிடம்  ரத்தத்தை நாம் தானமாக பெறலாம், அதிலிருந்து பிளாஸ்மாவை  சேகரித்து சிகிச்சை வழங்கலாம் .  இந்தியாவில் இந்த பிளாஸ்மா முறை விரைவில் நடைமுறைக்கு வரும்,  எதிர்காலத்தில் இந்த சிகிச்சையை  இந்தியா பயன்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார் .  தற்போதைய முதல் மாநிலமாக கேரளா பிளாஸ்மா சிகிச்சையளிக்க களத்தில் குதித்துள்ளது எனவே  இந்திய மருத்துவ உலகில் புது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.