Asianet News TamilAsianet News Tamil

நாட்டின் பொருளாதாரம் மீது  நம்பிக்கையில்லை  - போட்டு உடைத்த மன்மோகன் சிங்

indian economy-under-critical---manmogan-sing-pressure
Author
First Published Jan 30, 2017, 11:42 PM IST


நாட்டின் பொருளாதார நிலை, சூழல் ஆரோக்கியமாக இல்லை. சர்வதேச நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறைத்துவிட்டன என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ்கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி இப்படி ஒரு குண்டை போட்டுள்ளது.

‘2017-ல் இந்தியாவின் பொருளாதார நிலை’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் பொருளாதார வல்லுநர்கள் சேர்ந்து ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்தனர். அந்த அறிக்கையை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் நேற்று வெளியிட்டனர். அதன்பின் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டி அளித்தனர்.

முன்னாள் பிரதமர் மன்கமோன் சிங் பேசுகையில், “ நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை பாரதிய ஜனதா அரசு நாளை(இன்று) தாக்கல் செய்ய இருக்கிறது.  இந்தியாவின் இன்றைய பொருளாதார நிலை என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த இதுதான் சரியான நேரம் என்று நாங்கள் நினைத்தோம்.

நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நாட்டின் பொருளாதாரம் எங்கே செல்கிறது, எங்கே நகர்கிறது, நாம் சரியான பாதைக்கு கொண்டு செல்ல என்ன செய் வேண்டும் என்பதை குறித்து அறிக்கை தயாரித்துள்ளோம்.

உண்மையில் இப்போது நாட்டின்  பொருளாதார நிலை ஆரோக்கியமாக இல்லை. சர்வதேச நிதியம் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்பு 7.6 சதவீதமாக கணித்து இருந்தது. இப்போது அதை 6.6 சதவீதத்துக்கும் குறைத்து கணித்து இருக்கிறது. இதேபோல் பல பொருளாதார ஆய்வு நிறுவனங்களும் இதையே கூறுகின்றன.

இந்த கணிப்பு மீது நான் கருத்து ஏதும் கூறவில்லை. இதை உங்களிடம் விட்டு விடுகிறேன்'' என்றார்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், “ நாட்டின் பொருளாதார நிலை மகிழ்ச்சி அடையும் நிலையில் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதத்துக்கும் குறைத்து சர்வதேச அளவில் கணித்துள்ளதால், மிகுந்த கவலை அடைய வேண்டும். இது 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையாகும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி எண்ணிக்கைக்கு பின்னால் பாரதிய ஜனதா அரசு ஒளிந்து கொண்டு இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி காட்டி மக்களை பிரமிக்க வைக்க முடியாது. அவர்கள் வேலை வாய்ப்பை கேட்பார்கள்? தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் பொருளாதாரத்தை மிகைப்படுத்தி காட்டி வருகிறது. ஆனால், எங்களின் அறிக்கையை, நாட்டின் உண்மை நிலையைக் கூறும்.

அரசு என்பது நம்பிக்கையுடன், உத்வேகத்துடன் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை என்பது, நாட்டின் சூழலில் இருந்து வர வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் அரசு சமூக திட்டங்களுக்கு செலவு செய்வதைக் குறைக்க கூடாது. மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமே ஏழைமக்களை பாதுகாக்கும். கிராமப்புறங்களில் 60 சதவீத வேலைவாய்ப்பு இதன் மூலமே கிடைக்கிறது. இதை குறைத்தால், ஏராளமான மக்கள் வேலை இழப்பார்கள். இதை செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்'' எனத் தெரிவித்தார்.

விஜய் மல்லையாவுக்கு கடன் கிடைக்க ப.சிதம்பரம், மன்மோகன்சிங் உதவினார்கள் என்று பாரதியஜனதா குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்து மன்மோகன் நிருபர்களிடம் பதில் அளிக்கையில், “ நான் எதையும் சட்டத்துக்கு புறம்பாக செய்யவில்லை. நான் செய்த செயல் அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டு, மனநிறைவாகவே செய்தேன்'' என்றார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios