நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்காலாண்டில் 5 சதவீதமாகக்குறைந்தது. தொழில்துறை உற்பத்தியும் சரி்ந்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் தொடர்்ந்து 11 மாதங்களாக விற்பனைக் குறைவு ஏற்பட்டுள்ளது. வேலையி்ன்மையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


நாட்டின் பொருளாதாரம் மோசமான சூழலை நோக்கி நகர்வதைச் சுட்டிக்காட்டி மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

ஆனால், பொருளாதாரத்தில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று மத்திய அர சு கூறிவருகிறது இந்நிலையில் மத்திய ரயில்வேதுறை இணையமச்சர் சுரேஷ் அங்காடியிடம் நாட்டின்பொருளாதார வளர்ச்சிக் குறைவு குறித்து நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினார்கள். 

அதற்கு அவர் பதில்அளிக்கையில், “விமானநிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் திருமணம் முடிக்கிறார்கள் . இவை எல்லாம் பொருளாதாரம் ஸ்திரமாக, நன்றாக இருப்பதைத்தானே காட்டுகிறதுபொருளாதாரவளர்ச்சி ஒவ்வொரூ 3 ஆண்டுக்கு ஒருமுறையும் குறையத்தான் செய்யும், தேவையில் பெரிய அளவுக்கு தேக்கநிலை, குறைவு ஏற்படும். இது சுழற்ச்சி முறை. 

ஆனால், மீண்டும் எழுச்சி பெற்றுவிடும். பிரதமர் மோடியின் தோற்றத்தை சிலர் வேண்டுமென்றே சிதைக்க வேண்டும், அவரின் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்று  பேசுகிறார்கள் “ எனத் தெரிவித்தார்