Asianet News TamilAsianet News Tamil

கொரோனா வைரசுக்கு இந்தியர்கள் அஞ்சத் தேவையில்லை..!! பெண் விஞ்ஞானி சொன்ன பாசிடிவ் தகவல்...!!

தற்போதைக்கு தடுப்பூசி இல்லை ஆனால் அடுத்த ஆண்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம் .  பொதுமக்கள் தங்களுக்கு வைரஸ் தாக்கியதாக சந்தேகம் இருந்தால் உடனே சுகாதார அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் .

Indian don't want afraid about corona virus - expert and scientist says
Author
Chennai, First Published Mar 6, 2020, 4:43 PM IST

கொரோனா வைரஸ் குறித்து இந்தியர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என இந்திய பெண் விஞ்ஞானி கருத்து கூறியுள்ளார் , கொரோனா வைரஸ் சீனாவை கடந்து சுமார்  70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது .   இந்நிலையில் இந்தியாவை கொரோனா  வைரஸ் தாக்கத் தொடங்கியுள்ளது .  இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது .  கொரோனா  வைரஸ் குறித்த பீதி அதிகரித்துள்ள நிலையில்,  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி பேராசிரியை, மற்றும்  இந்திய முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும் விஞ்ஞானியுமான ககன்தீப் காங், 

Indian don't want afraid about corona virus - expert and scientist says

கொரோனா வைரஸ் குறித்து இந்தியர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை ,  இந்த நோய் உறுதி செய்யப்பட்ட ஐந்தில் நான்கு பேர் தாங்களாகவே குணமடைவார்கள் அதே போல் காய்ச்சல் இருமலுக்கு பாராசிட்டாமால் தவிர வேறு மருந்துகள் தேவைப்படாது .  ஐந்தாவது நபர் வேண்டுமானால்  மருத்துவரை பார்க்க வேண்டும் ,  அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் .  மூச்சுத்திணறல் இருந்தால் உடனே  மருத்துவரை பார்க்க வேண்டும் .  அதேபோல் இந்த காய்ச்சல் குழந்தைகளை தீவிரமாக பாதிப்பதில்லை .   முதியவர்களைதான் பெரிதும் பாதிக்கிறது . 

Indian don't want afraid about corona virus - expert and scientist says

அதேபோல் நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய நோய் உள்ளவர்களை இது பெரிதும் தாக்குகிறது .  தற்போதைக்கு தடுப்பூசி இல்லை ஆனால் அடுத்த ஆண்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம் .  பொதுமக்கள் தங்களுக்கு வைரஸ் தாக்கியதாக சந்தேகம் இருந்தால் உடனே சுகாதார அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் .  அதேபோல் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வேண்டும் .  பொதுமக்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும் , முக உறுப்புகளை தொடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios