கொரோனாவால் இந்தியாவில் 30 கோடி  பேர் பாதிக்க வாய்ப்புள்ளது என நோய் இயக்கவியல் மையத்தின் இயக்குனர்,  மருத்துவர் ரமணன் லட்சுமி நாராயணன் அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளார் .   உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கத் தொடங்கியுள்ளது.  இதுவரை 271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இதில் 196 பேர் இந்தியர்கள் 32 பேர் வெளிநாட்டவர்கள் ,  மொத்தத்தில்  23 பேர் இந்த வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர் என  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .  மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ,  இந்தியாவில் கொரோனா பரவல் குறைவாக உள்ளதாக கருதப்படுகிறது.  ஆனால் உண்மை நிலவரம் என்ன.?  இந்த வைரஸ் இந்தியாவில் தடுக்கப்படுமா.?  உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர்  ரமணன் கூறியதாவது :-  

உலகில் மற்ற நாடுகளை காட்டிலும் கொரோனாவால் பாதித்தவர்கள்  இந்தியாவில் குறைவு பேசப்படுகிறது ஆனால் நிலைமை அப்படி இல்லை, கொரோனா  நோய்த் தொற்றுடன் இருப்பவர்களை அதிகம் பரிசோதித்தால்தான் நிலைமை தெரியவரும் .  கொரோனா தீவிரமாக தாக்குவதில் இருந்து  சில வாரங்கள் நாம் பின் தங்கி இருக்கிறோம் அவ்வளவுதான் .  ஆனால் இது ஒரு சுனாமி போல அது நம்மை தாக்கலாம் .  ஸ்பெயினில் அப்படித்தான் நடந்துள்ளது .  உலகம் முழுவதும் கொரோனா குறித்து அதிக எண்ணிக்கையில்  பரிசோதனை நடத்துவது ஒரு பிரச்சினையாக உள்ளது .  ஆனால் சில வாரங்களில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகலாம்,   அது சில நிமிடங்களில் பல ஆயிரங்களை தாண்டலாம்,  நாம் நிச்சயம் அதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும் .  இந்தியாவும் சீனாவை போல அதிக மக்கள் தொகை கொண்ட  நாடு தான் தோற்று உருவானவர்கள் மூலம் கூடுதலாக இரண்டு பேருக்கு தொற்று உருவாவதை நினைவிற் கொள்ள வேண்டும்.

 

இந்தியாவில் எவ்வளவு பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்று அறுதியிட்டு கூறமுடியாது .  ஆனால் கணித மாதிரிகளை பயன்படுத்தி அதை ஒரளவு கணிக்க முடியும் .  அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை பாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.   இந்த சதவீதத்தில் குறைந்தபட்ச அளவு 20% என்று வைத்தால் கூட இந்தியாவில் 30 கோடி பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்புள்ளது.  அதாவது  ஐந்தில் ஒருவர் அல்லது பத்தில் ஒருவர் தீவிர பாதிப்புக்குள்ளாகலாம்  அப்படி கணக்கிட்டால் கூட 40 முதல் 50 லட்சம் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடும் .  இந்திய சுகாதாரத்துறை அதை சமாளிக்குமா.?  ஆனால்  இந்தியாவில் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான அவசர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே உள்ளன.  

இவ்வளவு பெரிய  நாட்டிற்கு இது மிகக் குறைவான எண்ணிக்கை என்பதுதான் கவலை அளிக்கிறது .  எனவே தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கவேண்டும் என்று வென்டிலேட்டர்களை  கொள்முதல் செய்யவேண்டும் அதற்கான கால அவகாசம் நமக்கு இல்லை வெரும் மூன்று வாரங்கள் தான் உள்ளன .  இந்தியாவும் சீனாவை போல நடவடிக்கை எடுத்தால் தான் தப்பிக்க முடியும் .  ஒரு கடற்கரையிலிருந்து சுனாமி வரும்போது அதை நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால் அதில் சிக்கி சாக வேண்டியதுதான்.  அதிலிருந்து தப்பிக்க நாம் எப்படி தயாராக வேண்டுமோ அப்படி தயாராக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .