மத்திய, மாநில அரசுகளுடன் உணவுக் கழகமும் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது  என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள் குறித்து 5வது கட்டமாக புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், இந்தியா மிக சிக்கலான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. சர்வதேச அளவிலான நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும். இந்த நெருக்கடியான சூழ்நிலையை இந்தியா தனது வாய்ப்பாக மாற்றி வருகிறது. நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம், சட்டம் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.

சரக்குகளை கையாள்வதில் உள்ள சிரமங்களை போக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊரடங்கு காலத்தில் பசியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவது நமது கடமை. மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து உணவுக்கழகமும் மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யும் ஏழைகளுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்க செய்த மாநில அரசுகளுக்கு பாராட்டுகள். பல்வேறு விதமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ஏழைகள் நேரடியாக பயன்பெற முடியும். தற்போதைய சவால்கள் மேலும் வலிமை மிக்க இந்தியாவை உருவாக்கும் 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2 ஆயிரம் செலுத்தி உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.