ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமற்ற உறுப்பினர்  பதவிகளுக்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன.

15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்த ஆண்டில் 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.  2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவி வகிப்பதற்கான இந்த தேர்தலில் ஆசிய, பசிபிக் பிரிவில் இந்தியா போட்டியிட்டது.இந்தியாவின் வேட்பு மனு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 55 உறுப்பினர்களை கொண்ட ஆசிய பசிபிக் குழுவால் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மார்ச் மாதத்திலிருந்து தூதர்கள் முககவசம் அணிந்து, சமூக தூரத்தை கடைபிடித்து பொதுச் சபை மண்டபத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் தங்கள் ரகசிய வாக்குகளை செலுத்தி வந்தனர்.இந்த தேர்தலில் போட்டியிட்ட கனடா அயர்லாந்து மற்றும் நார்வேவிடம் தோற்றது, மெக்சிகோவும் இந்தியாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டன. 


புதிய உறுப்பினர்கள் தங்கள் இரண்டு ஆண்டு காலத்தை 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடங்குவார்கள்.பொருளாதார கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிப்பது மற்றும் சக்தியைப் பயன்படுத்துவதை அங்கீகரிப்பது போன்ற சட்டபூர்வமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரே அமைப்பான் ஐநா. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய ஐந்து நிரந்தர வீட்டோ உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.