Asianet News TamilAsianet News Tamil

பாதுகாப்பு தர துப்பு இல்ல.. திமுக ஆட்சியை கலைத்தால் என்ன.? ஸ்டாலின் அரசை டரியல் ஆக்கிய வினோஜ்.பி. செல்வம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழல் சரியில்லை என கூறி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில்  திமுக அரசை கலைத்தால் என்ன? எனதமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்போன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Incompetent to provide security.. Why not  Dissolve the DMK government? Vinoj B. Selvam Twit.
Author
First Published Sep 30, 2022, 12:20 PM IST

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழல் சரியில்லை என கூறி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக அரசை கலைத்தால் என்ன? எனதமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்போன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த கருத்து திமுகவினரையும் ஆட்சியாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் 51க்கும் மேறபட்ட இடங்களில் பேரணி நடத்த ஆர் எஸ் எஸ் நீதிமன்றத்தின் வாயிலாக அனுமதி பெற்றது. அதற்கான ஏற்பாடுகளை அவ்வியக்கம் தீவிரமாக முன்னெடுத்து வந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் என்றும், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Incompetent to provide security.. Why not  Dissolve the DMK government? Vinoj B. Selvam Twit.

இதையும் படியுங்கள்:  VCK- RSS-ம் ஒன்றா.?? எங்களுக்கு அனுமதி மறுப்பது நியாயமா.? ஸ்டாலின் அரசுக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்த திருமா.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனங்களையும், ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகின்றன, இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடப்பது சட்ட ஒழுங்குக்கு உகந்தது அல்ல என காவல்துறை விளக்கமளித்துள்ளது. இதேபோல, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து அறிவித்த சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இதையும் படியுங்கள்: அமைச்சர் பொன்முடி ஓசியில் பிறந்த ஓசி.. திமுகவை போட்டு தாக்கிய கஸ்தூரி..!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது, பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு நிபர்ந்தனைகளை விதிக்கலாம், அல்லது போதிய பாதுகாப்பு கொடுத்து பேரணியை ஒழுங்குபடுத்தலாமே தவிர ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க முடியாது என பாஜகவினர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநில செயலாளர் வினோத் பி.செல்வம் தனது ட்விட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில்,

 

" தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை சரியில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளது காவல்துறை. எனவே  சட்டம் ஒழுங்கு மோசம் என்று காவல்துறையை ஒப்புக் கொண்டிருக்கிறது, அப்படியானால் சட்டப்பிரிவு 356 - ஐ பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு இல்லாத இந்த மாநிலத்தின் அரசை கலைத்தால் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்த கருத்து திமுகவினரையும், திமுக தலைமையையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios