Asianet News TamilAsianet News Tamil

VCK- RSS-ம் ஒன்றா.?? எங்களுக்கு அனுமதி மறுப்பது நியாயமா.? ஸ்டாலின் அரசுக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்த திருமா.

மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்சும் அரசியல் கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஒரே வகையானவையா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Is VCK-RSS the same?? Is it fair to deny us permission? Thiruma started giving headache to Stalin's government.
Author
First Published Sep 30, 2022, 11:05 AM IST

மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்சும் அரசியல் கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஒரே வகையானவையா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆர்.எஸ்.எஸ்சை காரணம்காட்டி சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது சரிதானா? என்று தமிழக அரசுக்கு எதிராக திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு:-

அக்டோபர்-2 ஆம் தேதி , காந்தி அடிகளின் பிறந்த நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. அவ் அமைப்பு அரசியல் கட்சி அல்ல,  மாறாக மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில் அதன் மீது அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயம் உள்ளது,  ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதே நாளில் நடத்தவிருந்த மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு தடை விதித்திருப்பது எவ்வகையில் நியாயம் என கேள்வி எழுகிறது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில் அதற்கு பின்வருமாறு காரணங்களைக் கூறுகிறது காவல்துறை : 

Is VCK-RSS the same?? Is it fair to deny us permission? Thiruma started giving headache to Stalin's government.

இதையும் படியுங்கள்:  வாஜ்பாய், மோடி, என்ற இரு பிரதமர்களை நாட்டிற்கு தந்த இயக்கம்.. RSS-ன்னா சும்மாவா? இந்து மக்கள் கட்சி ஆவேசம்.

இந்திய ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன, மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கும் அனுமதிக்க இயலாது என குறிப்பிட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்: மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மங்கைமடம் டாஸ்மாக் கடையை அகற்றுங்க.. அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்கத் தக்கதாக உள்ளது. ஏனெனில் அவை இரண்டும் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அல்ல, ஆனால் சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளும் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகள் ஆகும். இந்த மூன்று அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து அறிவித்திருந்த சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டத்திற்கு, எமது தோழமை கட்சிகளான மதிமுக, ம்மக, தவாக, நாதக, எஸ்டிபிஐ,  சிபிஐ (எம்எல்வி) தபுக என 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும்,  திக, திவிக, தபெதிக, போன்ற சமூக இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Is VCK-RSS the same?? Is it fair to deny us permission? Thiruma started giving headache to Stalin's government.

அதாவது  இந்தப் போராட்டம் முற்றிலும் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துவதாகும், எனவே இதனை மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பது ஏற்புடையதாக இல்லை. மதவெறி ஃபாசிச ஆர்எஸ்எஸ் அமைப்புடன் சனநாயக வழியில் மக்களுக்கு பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வது வேதனைக்குரியதாகும் .எனவே காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் நாள் இன்று நடக்க உள்ள எமது சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios