income tax raid on dhanalakshmi srinivasan group
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர், அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூரை சொந்த ஊராக கொண்டவர் சீனிவாசன். பள்ளி முதல் மருத்துவ கல்லூரி வரை, தனலட்சுமி சீனிவாசன் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். பெரம்பலூர், திருச்சி, சமயபுரம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், உரிமையாளர் சீனிவாசனின் வீடு, உறவினர்களின் வீடு என பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர், திருச்சி, மாமல்லபுரம், சமயபுரம் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரி சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
