முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நிழலாக இருக்கும் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக நிர்வாகி வீட்டில் சோதனை

 கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான இவர், கோவை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவின் வெளியீட்டாளராகவும் இருந்து வருகிறார். வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, ஒப்பந்தம் உள்ளிட்ட விஷயங்களில் தலையிட்டதாக சந்திரசேகர் மீது திமுக மற்றும் அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. வழக்கும் தொடர்ந்திருந்தது. அதன் அடிப்படையில் வேலுமணி, அவர் சகோதரர் அன்பரசன், சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து இரண்டு முறை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் வேலுமணி மற்றும் சந்திரசேகர் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். 

ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை..! ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்

தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்..! ஆ.ராசாவிற்கு டஃப் கொடுக்கும் நயினார் நாகேந்திரன்

கவுன்சிலர் வீட்டில் சோதனை

இந்நிலையில் இன்று காலை முதல் சந்திரசேகருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, அவரின் தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடவள்ளியில் உள்ள அவர் வீட்டில் மட்டும் சுமார் 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் 

இதையும் படியுங்கள்

ஆடி மாசமே வரல அதுக்குள்ள கூரை பறக்குது.. அரசு பேருந்தின் அவல நிலை.. தலையில் அடித்துக் கொண்ட மக்கள்