IT Raid: அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் சோதனை! அதிர்ச்சியில் திமுகவினர்!

அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் நவம்பர் 3ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரை வருவமான வரித்துறை சோதனை நடைபெற்றது. 

Income Tax Department raids again Minister AV Velu college tvk

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி, ஜூவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அருணை கிரானைட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

Income Tax Department raids again Minister AV Velu college tvk

இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் நவம்பர் 3ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரை வருவமான வரித்துறை சோதனை நடைபெற்றது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Income Tax Department raids again Minister AV Velu college tvk

இந்த சோதனைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதை அமைச்சர் எ.வ.வேலு திட்டவட்டமாக மறுத்தார். எங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு சொந்தமான அருணை மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் 6 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios