income tax department officials raid finished in jaya tv vivek home
ஜெயா டி.வி. நிர்வாகியும் இளவரசியின் மகனுமான விவேக்கின் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் கடந்த 63 மணி நேரமாக நீடித்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இதேபோல் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் நடந்து வந்த வருமானவரி சோதனையும் நிறைவடைந்துள்ளது.
சசிகலா குடும்பத்தினர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை நேற்று முந்தினம் காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த சோதனையை 1800 அதிகாரிகள் 187 இடங்களில் மேற்கொண்டனர்.
இதனிடையே சசிகலா உறவினர்கள் 150 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள், பொருட்கள், சொத்துக்கள் மதிப்பு பற்றி வருமான வரித்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள், ஏராளமான நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே ஜெயா டி.வி. நிர்வாகியும் இளவரசியின் மகனுமான விவேக்கின் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் கடந்த 63 மணி நேரமாக நீடித்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.
அதேபோல், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் நடந்து வந்த வருமானவரி சோதனையும் நிறைவடைந்துள்ளது.
இளவரசியின் மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணப்ரியாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
ஆவணங்கள் ஆய்வு செய்து கணக்காளர் மற்றும் பணியாளர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயா டிவி அரசுடைமையாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி சொன்னது பலிச்சுடும்போல தெரியுதே என அதிமுக வட்டாரங்கள் நகையாடி வருகின்றனர்.
