In future DMK will contest single without alliance parties
கூட்டணி கட்சிகளால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று முடிவு செய்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த ஜெயலலிதா பாணியில். வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன், ஏற்கனவே, மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகித்த இரு கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தை அமைப்பு, ம.தி.மு.க., போன்றவை, வரிசையாக தி.மு.கவுக்கு ஆதரவு அளித்தன. இந்த கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் திமுக வேட்பாளர் மருது கணேசுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
திமுகவின் சொந்த செல்வாக்கு, கூட்டணி கட்சிகளின் பலம் போன்றவற்றால் மருது கணேஷ் ஜெயித்துவிடுவார் என ஸ்டாலின் நம்பிக்கையோடு இருந்தார்.

ஆர்.கே.நகரில், 2016ல் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டபோது, தி.மு.க., பெற்ற ஓட்டுக்களோடு, கூட்டணி கட்சியினருக்கென சுமார் இருபதாயிரம் ஓட்டுக்களும், அ.தி.மு.க., அரசுக்கு எதிரான மன நிலையில் இருக்கும் மக்கள் ஓட்டுக்களும் தி.மு.க., தரப்புக்கு கிடைத்தாலே, எளிதில் கட்சி வெற்றி பெறும் என்றுதான், ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.ஏற்கனவே தி.மு.க., பெற்றிருந்த ஓட்டுக்களிலேயே முப்பதாயிரத்துக்கும் கூடுதலான ஓட்டுக்கள் இம்முறை கிடைக்காமல் போய், தி.மு.க., டிபாசிட் இழந்துள்ளது.

இது ஸ்டாலின் மற்றும் திமுகவினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிநிலையில், கூட்டணி கட்சிகள் யாருக்குமே, ஆர்.கே.நகரில் செல்வாக்கும் இல்லை; ஓட்டும் இல்லை.
தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்குமென்றால், அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமடன்ற , சட்டசபை தேர்தல்களில் , ஜெயலலிதாவைப் போல, தி.மு.க.,வை தனித்தே போட்டியிட வைக்கலாம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஸ்டாலினின் இந்த முடிவு கூட்டணி கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
