இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க.,தலைவர் ஸ்டாலின், .இந்தியாவிற்கு எதிரி நாட்டினரால் ஆபத்து இல்லை. ஆட்சியில் இருப்பவர்களால்தான் ஆபத்து உள்ளது என்றும் . பிரதமர் நரேந்திர மோடி அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்  என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மிரட்டப்படுகின்றனர்… ரிசர்வ் வங்கி கவர்னர் ஓடுகிறார்….சிபிஐ அலுவலகம் பூட்டப்படுகிறது. தேர்தல்ஆணையத்திற்கு மிரட்டல் வருகிறது. லோக்பால் அமைக்கவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது என அடுக்கடுக்காக மோடி குற்றம்சாட்டினார்.

தமிழக முதலமைச்சரை  மாற்றக்கோரிய 18 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்பட்டது. முதலமைச்சருக்கு எதிராக சட்டசபையில் ஓட்டளித்த துணை முதலமைச்சர்  ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மார்ச்சில் வெளிவர உள்ளது. 

அப்போது 11 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்கும் நிலை வரும். காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சட்டசபைக்கும் தேர்தல் வரும். அப்போது மோடி, பழனிசாமி அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும், என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.