அட பொசுக்குனு திருமாவளவன் திமுகவை பார்த்து இப்படி சொல்லிட்டாரே..!
தமிழகத்தில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்தத் தேர்தலில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதுதான் தமிழக அரசின் தற்போதைய இன்றியமையாதவொரு கடமையாகும் என திருமாவளவன் கூறியுள்ளார்
திமுக தேர்தல் வாக்குறுதி
தமிழகத்தில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்தத் தேர்தலில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்
திமுக ஆட்சி அமைந்து ஓராண்டாகி உள்ள நிலையில், இதுவரை, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், தற்போதைக்கு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறி விட்டு, தற்போது, நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு அறிவித்தது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சொல்லும், செயலும் ஒரே திசையில் அமைந்திட வேண்டும் என கூறியுள்ளார்.
கூட்டணி கட்சி நெருக்கடி
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதுதான் தமிழக அரசின் தற்போதைய இன்றியமையாதவொரு கடமையாகும். சொல்லும், செயலும் ஒரே திசையில் அமைந்திட வேண்டும். மாண்புமிகு முதல்வர் அவர்கள் நலம்புரிய வேண்டுகிறேன்” என பதிவிட்டு அதில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்துள்ளார்.