தமிழக முதலமைச்சர் கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிக்கொள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் அருந்தலாம்  என அறிவித்துள்ளதற்கு  இம்ப்காப்ஸ் நிறுவனம் தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனம்,   மத்திய அரசின் ஆயுஷ் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆரோக்கியம் என்ற திட்டத்தை அமல்படுத்தி, மக்கள் நோயெதிர்ப்பு சக்தி பெருக்கிக் கொள்ள  கபசுர குடிநீர் அருந்தலாம் என பரிந்துரைத்துள்ளது, வரவேற்க தக்கது,  25 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள முன்னணி சித்த ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவர்கள் தயாரிக்கும் பல மாநில கூட்டுறவு நிறுவனமான இம்ப்காப்ஸ் சார்பிலும் மற்றும் இம்காப்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ள சுமார் 16,000 சித்தா ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவர்கள் சார்பில் வரவேற்கிறோம் 

.ஆரோக்கியம் திட்டத்தின்கீழ் நிலவேம்பு மற்றும்  கபசுர குடிநீர் ஆகியவற்றினை மக்களுக்கு அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயலும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்திருப்பது உண்மையிலேயே மக்களின் நலன் காக்கும் செயலாகும் ,  சித்த மருத்துவத்தில் வளர்ச்சிக்கும் மற்றும் சித்த மருத்துவத்தின் பயன்கள் மக்களை சென்றடையும் விதமாகவும் கடந்த காலங்களில் மறைந்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் அவர்களும் மாண்புமிகு அம்மா  அவர்களும் செயலாற்றி வந்ததை தமிழக மக்கள் நன்கு அறிவர் அந்த வரிசையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்  வெளியிட்டுள்ள இந்த  அறிவிப்பு அமைந்துள்ளது .   சித்த மருத்துவ உலகம் தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது  என்பதை இச்சமயத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .  நில வேம்பு மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை  சித்த மருத்துவர்களின் பரிந்துரையின்படி பொதுமக்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் தங்களின் நோயெதிர்ப்பு  சக்தியை அதிகரித்து அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றில்  இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இயலும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கமும் தமிழக முதலமைச்சருக்கு  நன்றி தெரிவித்துள்ளது.   இது குறித்து தெரிவித்துள்ள அந்த சங்கம்,   சென்னையில் கண்காணிப்பில் உள்ள ஒரு லட்சம் பேர்களுக்கு கபசுர குடி நீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் வழங்கிடம் மேலும் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தவேண்டும்.  உலகையே உறைய வொத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டின் சிறப்பான நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தப்படிருப்பது வரவேற்புக்குரியது. ஆனால் பொதுமக்கள் அறியாமையால்  சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால் நாளுக்குநாள் தொற்று அதிகரித்துவருகிறது.  ஆகையால் ஊரடங்கை முழு ஊரடங்காக அமுல்படுத்தினால் மட்டும்தான் மேலும் பரவாமல் தடுக்கமுடியும்.  நோய்தொற்று பரவாமல் தடுத்திட மாநிலமுழுவதும் கபசுர குடிநீர் வழங்குவதனை விரிவுபடுத்தியும் அதனை நியாய விலைக்கடைகளில் இலவசமாக விநியோகிக்கவும் ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன் எற கேட்டுகொண்டுள்ளது.