அஜித் ரசிகர்கள் சிலர் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் சேர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவந்தரராஜன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். அதில் மோடியின் திட்டங்களை மக்களிடையே நீங்கள்தான் கொண்டு செல்ல வேண்டும். மோடி தொண்டர்களாக நீங்கள் மாறி தமிழகத்தில் தாமரையை மலர செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

என் ரசிகர் இயக்கங்களை நான் கலைக்கவும் இந்த காரணமே பின்னணி, இந்த நேரத்தில் நான் தெளிவாக சொல்ல விரும்புவது, எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஆசை இல்லை, நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை, சமூக வலைதளங்களில் மற்ற நடிகர்களை , விமர்சகர்களை தரமற்ற முறையில் வசைபாடுவதை நான் என்றும் ஆதரிப்பதில்லை. , என் ரசிகர்கள் படிப்பு, பணி, சட்ட ஒழுங்கு, ஆரோக்கியத்தின் மேல் கவனம் வைக்க வேண்டும் என அறிக்கை விட்டு தமிழிசைக்கு தாறுமாறான பதிலடி  கொடுத்து அறிக்கை வெளியிட்டார் அஜித் .  

இந்நிலையில் நேற்று வெளியான அஜித்தின் அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த  மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி   கூறுகையில் என அரசியலில் ஈடுபடும் விருப்பமில்லை. அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு. அவருக்கு என் வாழ்த்துக்கள், இதனால் நான் அஜித்தின் ரசிகை ஆகிவிட்டேன் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.