நான் கோலி மட்டும்தான் விளையாடி இருக்கேன்.. இப்போ நாடு நாடா ஓடுகிறேன்.. மார்த்தட்டும் அமைச்சர்.
நான் ஆறாம் வகுப்பு வரை கோலி மட்டும்தான் விளையாடினேன். எனக்கு விபத்து ஏற்பட்டபோது இனி தரையில் சம்மணம் போட்டு அமர முடியாது என மருத்துவர்கள் கூறினர். ஆனால் அடுத்த வருடமே பத்மாசனம் போட்டு அமர்ந்து காட்டினேன்,
எட்டு வயது வரை கோலி மட்டுமே விளையாடிய தான் இப்போது நாடு நாடாக ஓடிக் கொண்டிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். தான் விபத்தை சந்தித்த போது இனி தரையில் சம்மணம் போட்டு கூட அமர முடியாது என மருத்துவர்கள் கூறிய நிலையில் அடுத்த வருடமே பத்மாசனம் போட்டு அமர்ந்து காட்டியதாக அவர் கூறியுள்ளார்.
திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவராக இருந்து வருகிறார் மா.சுப்ரமணியன், வெட்டிக் கொண்டுவா வா என்றால் கட்டி வரும் சாமர்த்திய சாலியாகவும் அவர் திமுகவில் செயல்பட்டு வருகிறார். ஸ்டாலினுக்கு அடுத்து சிறந்த மேயர் என்ற பெயரையும் பெற்றார் அவர், கொரோனா உச்சத்தில் இருந்தபோதே நிச்சயம் மருத்துவம் படித்த ஒருவர்தான் அமைச்சராக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் மேயராக இருந்த மா. சுப்பிரமணியத்தை சுகாதாரத்துறை அமைச்சராக்கினார் ஸ்டாலின். கொடுத்த வாய்ப்பை பொறுப்புடன் செயல்பட்டு சுற்றி சுழன்று வருகிறார் மாசு. இப்படி அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்,
இந்நிலையில்தான் இன்று சென்னையில் துவங்கிய பன்னாட்டு டென்னிஸ் போட்டி 2022 மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய அவர் கூறியதாவது, ஒரு வார காலம் நடைபெறவுள்ள போட்டியினை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஒய்எம்சிஏ என்பது தமிழ்நாடு அளவில் புகழ்பெற்ற ஒரு விளையாட்டு தளம், வெளிநாடுகளிலிருந்தும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து போட்டியில் பங்கேற்கின்றனர். சைதாப்பேட்டைக்கு என்று பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், ஒய்எம்சிஏ மைதானம் அன்றிலிருந்து இன்றுவரை தனிச் சிறப்பாக இருந்து வருகிறது. கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் பன்னோக்கு மருத்துவமனையை வர உள்ளது. உடற்பயிற்சி என்பது மிகவும் அத்தியாவசியமானது, உடற்பயிற்சி என்பது சுய ஒழுக்கம் என்பதும் வாழ்விற்கு மிகவும் அவசியம்.
நான் ஆறாம் வகுப்பு வரை கோலி மட்டும்தான் விளையாடினேன். எனக்கு விபத்து ஏற்பட்டபோது இனி தரையில் சம்மணம் போட்டு அமர முடியாது என மருத்துவர்கள் கூறினர். ஆனால் அடுத்த வருடமே பத்மாசனம் போட்டு அமர்ந்து காட்டினேன், முடியாது என்ற ஒன்று இல்லை, எட்டு ஆண்டுகளாக 36 மாநிலத்திலும் 12 நாடுகளிலும் ஓடியுள்ளேன், விருதுகள் பெறுவதற்காக நான் ஓடவில்லை, சர்க்கரை நோயை குறைக்க வேண்டுமென ஓடினேன். இப்போது அது ஏராளமான விருதுகளை பெற்றுத் தருகிறது. எனவே சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும், எனவே அதற்கு நம் உடல் மிகவும் முக்கியமானது இவ்வாறு அவர் கூறினார். தான் கலந்து கொள்ளும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அமைச்சர் மா.சுப்ரமணியில் தனது ஓட்ட சாதனைகளை கூறி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.