ila ganesan pressmeet about up election results

உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றி தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களுக்கான சரிவின் தொடக்கம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். 

உத்திரப்பிரதேச தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் நிலையில் உள்ளதை அடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். கமலாலயத்தில் கொண்டாடங்கள் களைகட்டியுள்ளன. 

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. மகத்தான வெற்றியைப் பெற்றிருப்பதாகக் கூறினார். இந்த வெற்றி தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களுக்கான சரிவின் தொடக்கம் என்றும் விரைவில் தேசிய கட்சிகள் தமிழகத்தில் வளரும் என்றும் தெரிவித்தார். இதே கருத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் முன்வைத்துள்ளார். 

தென்னை மரத்தில் தேள் கடிச்சா பனை மரத்தில் நெறி கட்டும் என்று கிராமத்தில் சொல்லப்படும் ,பழிமொழி போல இல.கணேசன் பேசுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்ததுள்ளனர்.

தமிழக நீரோட்டத்தை தேசிய கட்சிகள் இழந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை இல.கணேசன் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மீம்ஸ்சுகளும் இணையத்தில் ரெக்கை கட்டி பறக்குது