கலைஞர் கருணாநிதி எப்போதெல்லாம் கலங்கினாரோ..! அப்போதெல்லாம் அவரின் கரங்களை பற்றி ஆறுதல் சொன்னவர் இனமான பேராசிரியர் அன்பழகன். அண்ணாவின் தம்பியாய்.!கலைஞரின் அண்ணனாய் திமுக கழகத்தை கட்டிக்காத்தவர்களில் இவரும் ஒருவர். கருணாநிதி பொதுவெளியில் வாஞ்சையோடு பேராசிரியர் என்று அழைத்தாலும், அறைக்குள் அண்ணன் என்று தான் கருணாநிதி அழைப்பார்.திராவிட இயக்கத்தின் சகாப்தங்களில் இவரும், ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.
T.Balamurukan

திமுக கழகத்தைக் கலைஞர்; கட்டிக்காத்தார் என்றால் இனமானப் பேராசிரியர் அன்பழகன் பெரும் பழியில் இருந்து, மாபெரும் வரலாற்று பிழையில் இருந்து கழகத்தைக் காத்தவர். வாழ்க திராவிடம்; வாழ்க கிளர்ச்சி தொண்டா துவேசமா? ,வகுப்புரிமைப் போராட்டம் போன்ற பல நூல்களை அதாவது திராவிடச் சித்தாந்தங்களின் விரிவான, அறிமுக நூல்களை எழுதியவர். மடைதிறந்த வெள்ளமெனப் பேசுவார்.திருக்குறளை மேற்கோள்காட்டி பேசுவார். எல்லாவற்றிற்கும் மேலாக கருணாநிதியின் உற்ற நண்பனாக, உரிய ஆலோசகராக இருந்தவர் அன்பழகன்.

இராமையா என்னும் தனது பெற்றோர் இட்ட பெயரை மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அன்பழகன் என்று மாற்றிக்கொண்டவர். பெரியாரின் வழிகாட்டடியாய் ஏற்று அண்ணாவின் கொள்கைகளை வரித்து கருணாநிதிக்கு எப்போதும் துணைநின்று திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பியவர் பேராசிரியர் அன்பழகன். கருணாநிதியின் மறைவு ஆகஸ்ட் 7.அன்பழகனின் மறைவு மார்ச் 7. இதிலும் இணைபிரியாமல் அண்ணாவின் தம்பியும் கலைஞரின் அண்ணனும் ஓய்வுவெடுக்கச் சென்றிருக்கிறார்கள்.