இராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில்  எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம்  நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக திருசெந்தூர் முருகன் அருள் என கூறி வெற்றில் வேல் வீரவேல்  என  முழக்கமிட்டு அவருக்கு வேல் வழங்கினார்கள் .வேலும் வாளும்  மேடையில் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் முன்னிலையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதேபோல் இராஜபாளையம் அருகே உள்ள  N. புதூர் பகுதியைச் சேர்ந்த ராமதிலகம் என்ற மாணவி பல் மருத்துவ  படிப்பிற்காக நிதி உதவி கேட்டு அமைச்சரிடம் மனு கொடுத்தார். உடனடியாக மேடையில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: புரட்சி தலைவர் கொண்டுவந்த இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்ட பொழுது மீண்டும் கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதே போல் தற்போதும் இரட்டை இலை முடக்கப்பட்ட போது அதை கொண்டு வந்தவர்கள் முதலமைச்சர் எடப்பாடியும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தான். 

திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் இரண்டு மாதம் மூன்று மாதங்கள் இந்த ஆட்சி என கூறி வருகிறார். உங்களுக்குத்தான் இரண்டு மாதங்களில் முடிவு கிடைக்கும். அதிமுக தொண்டர்கள் ஒரு லட்சம் பேர் இன்று பச்சை மையில் கையெழுத்திட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் தமிழக முதல்வர் எடப்பாடி தான். சட்டமன்றத்தில் சபாநாயகரையே தள்ளிவிட்டு ஆடி ஆட்டம் போட்டவர்கள் இன்று மறைந்து விட்டார்கள். மீதி உள்ளவர்களுக்கு என்ன கதி கிடைக்க போகிறதோ தெரியவில்லை.திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்டத்திற்கு ஆண்டவன் தக்க தண்டனை கொடுப்பான். ஆண்டவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். 

திமுக ஆட்சியில் மின்வெட்டு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது  தமிழகத்தை மின் வெட்டு இல்லாத மின் மிகை மாநிலமாக மாற்றியுள்ளார் முதல்வர் எடப்பாடியார். திமுக கட்சியினர் தமிழை விற்று பிழைப்பு நடத்துகின்றனர். தமிழை வாழவைத்த கட்சி அதிமுக. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து தான் முள்ளிவாய்க்காலில் 2 லட்சம் தமிழர்களை படுகொலை செய்தது. தமிழர்களை 2 லட்சம் வரை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்த கட்சி காங்கிரஸ். அதற்குத் துணைபோன கட்சி திமுக. ஜல்லிக்கட்டை தடை போட்டது காங்கிரஸ், துணை போனது திமுக. இவர்கள் இன்று வந்து அலாங்க நல்லூரில் தமிழை பற்றி பேசினார். 2 பேரை சுட்டு கொன்ற  ராஜபக்சேவை பார்த்தால் சண்டை போட தோன்றுகிறது. துப்பாக்கியை எடுத்துக்  சுட்டு கொல்ல வேண்டும் என  என மனதில் தோன்றுகிறது. 

நீட் தேர்வை தடுப்பதற்காக மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டியது திமுகவும் காங்கிரசும்தான், ஆகையால்தான் தமிழக முதல்வர் 7.5% நீட் தேர்வுக்கு  மருத்துவ  படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கி உள்ளார். இந்தியா முழுவதும் எந்த  டிவியை திருப்பினாலும் திமுகவை சேர்ந்த  தாயாநிதி மாறனின் தொலைக்காட்சிதான் ஓடுகிறது. திமுகவில் இளைஞர்கள்  கிடையாது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதுபோல்  ஆண்மீக கட்சி என்றால் அது அதிமுக  கட்சிதான். இவ்வாறு பேசினார்.