அரசியலில் கட்டாயப்படுத்தி நான் இல்லை! என்னை விட்டு விட்டால் விவசாயம் பார்ப்பேன்! அண்ணாமலை சரவெடி.!
மக்கள் இப்படித்தான் அரசியல் வேண்டும் என்று சொன்னால் அரசியல்வாதிகள் அவர்களை மாற்றிக் கொள்வார்கள் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இந்த மாதிரியான அரசியல்வாதியைத்தான் நான் ஆதரிப்பேன் என்று மக்கள் சொல்லிவிட்டால் அனைத்து அரசியல்வாதிகளும் மாறுவார்கள்.
கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் தேசிய தலைவர்கள் பேசுவார்கள். ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்லி அது எங்கே போய் முடியும் என தெரியாது. இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அக்ரகார சாமக்குளம் பகுதியில் உள்ள குளக்கரை சுத்தம் செய்யும் பணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுப்பட்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- இன்று ஒரு மணி நேரம் நாட்டின் தூய்மைக்காக மக்கள் அனைவரும் தூய்மை பணியில் செய்ய வேண்டும் என பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார். அதன்படி இங்கு தீமை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை என் மண் என் மக்கள் நடைபயணம் மிகவும் நன்றாக உள்ளது. இனி 4ம் தேதி மேட்டுப்பாளையத்தில் மீண்டும் அந்த நடைபயணத்தை துவங்குகின்றோம். இதில் இளைஞர்கள் மகளிர் குடும்பத் தலைவிகள் என அனைவரும் பங்கேற்கிறார்கள். ஜனவரி மாதம் இந்த நடைபயணம் முடியும் பொழுது பாஜகவிற்கு தமிழகத்தில் பெரிய எழுச்சி ஏற்பட்டு இருக்கும் என்றார்.
இதையும் படிங்க;- ஒரு சீட்டுக்கு திமுகவிடம் கையேந்தி 5க்கும், 10க்கும் அலையும் கம்யூனிஸ்டுகள்! இந்தியாவின் சாபக்கேடு.! பாஜக
இன்று நான் டெல்லிக்கு செல்கிறேன். யாத்திரையில் ஒவ்வொன்றை கடக்கும் பொழுதும் தேசிய தலைவர்களுக்கு நடைப்பயணம் எப்படி செல்கிறது என்பது குறித்தான அறிவிப்பை நான் தெரிவித்து வருகிறேன். மூன்றாம் தேதி பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. டெல்லி சென்று விட்டு வந்து அதில் பங்கேற்கிறேன். அதனை தொடர்ந்து 4ம் தேதியில் இருந்து பாதையாத்திரை மீண்டும் துவங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏழு மாத காலங்கள் இருக்கின்ற நேரத்தில் அவரவர்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என அனைவரும் எண்ணுவார்கள். பாஜகவும் அதற்கான வேலையை செய்து வருகிறது.
தூய்மை செய்வது என்பது அரசு சார்ந்த நிகழ்வு என்பதை சொல்வதை விட பொதுமக்கள் தாமாக முன்வந்து ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மணி நேரம் இதனை செய்ய வேண்டும். தூய்மையான அரசியலின் அடிப்படை அச்சாரம் என்பதை மக்கள் அதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தூய்மையான அரசியல் என்பதை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தூய்மையான அரசியல் என்பது ஒரு விதை. தற்பொழுது இதனை நாம் பேச ஆரம்பித்து உள்ளோம் முடிந்தவரை அதனை நடைமுறையில் பின்பற்ற பார்க்கிறோம். தூய்மை அரசியலை பற்றி கூற வேண்டும் என்றால் தற்பொழுதுதான் செடி வளர்ந்து வருகிறது. என்னதான் வேகமாக வளர்ந்து வந்தாலும் ஒரு கட்டத்தில் practical ஆகவும் பார்க்க வேண்டி உள்ளது. தற்பொழுது தூய்மை அரசியல் என்பதை ஒரு தாரக மந்திரமாக முன்வைத்து எடுத்து செல்கிறோம். தூய்மை அரசியல் என்று சொன்னாலே தோல்விகள் நிச்சயம் அதனை தாண்டித்தான் நாம் நிற்க வேண்டும்.
இதையும் படிங்க;- அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்.!
மக்கள் இப்படித்தான் அரசியல் வேண்டும் என்று சொன்னால் அரசியல்வாதிகள் அவர்களை மாற்றிக் கொள்வார்கள் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இந்த மாதிரியான அரசியல்வாதியைத்தான் நான் ஆதரிப்பேன் என்று மக்கள் சொல்லிவிட்டால் அனைத்து அரசியல்வாதிகளும் மாறுவார்கள். அரசியலில் கட்டாயப்படுத்தி நான் இல்லை. அரசியலில் இருக்க வேண்டுமே என்று இருக்கிறேன். இந்த நேரத்தில் என்னை விட்டு விட்டால் நான் தோட்டத்திற்கு சென்று விவசாயம் பார்ப்பேன். இதைவிட எனக்கு எல்லாமே முக்கியம் என்பது என்னுடைய வேலையை என்னுடைய தோட்டத்தில் செய்யணும் அதற்காகத்தான் ரசிகினேஷனே செய்துவிட்டு வந்தேன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசியலை ஒரு Tool ஆக பார்க்கிறேன். ஒன்பது மாதங்களாக NGO நடத்தி வருகிறேன். அரசியலைப் பொறுத்தவரை 70% நெகட்டிவ் 30% பாசிட்டிவ் உள்ளது. ஏனென்றால் இங்கு தனிமனித தாக்குதல் சித்தார்ந்த அடிப்படையில் தாண்டி நிற்க வேண்டும். இதில் கிடைக்கக்கூடிய மாற்றம் என்பது மற்றதை விட வேகமாக கிடைக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.