போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டை கிழிந்து விட்டது என காங்கிரஸ் எம்பிக்கள் கூறுகிறார்கள், சண்டைக்குப் போனால் சட்டை கிழியத்தான் செய்யும், அப்படி என்றால்  உங்களை யார் டெல்லிக்கு போக சொன்னது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டை கிழிந்து விட்டது என காங்கிரஸ் எம்பிக்கள் கூறுகிறார்கள், சண்டைக்குப் போனால் சட்டை கிழியத்தான் செய்யும், அப்படி என்றால் உங்களை யார் டெல்லிக்கு போக சொன்னது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அவர் திமுகவினரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 3 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 31 மணி நேரம் பல்வேறு கேள்விகள் கேட்டு அவரை துலைத்தெடுத்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்நாள் போராட்டத்தில் மாநில முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ரன்ந்தீப் சுர்ஜேவாலா, கே.சி வேணுகோபால், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபிந்தர் சிங் பாதல், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இரண்டாவது நாள் போராட்டத்தில் தமிழகத்தைச் சார்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர், அப்போது அவர் ஆடைகள் கிழிக்கப்பட்டுள்ளது. தனக்கு நடந்த கொடுமை குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார் இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் என்றும் பாராமல் காட்டுமிராண்டித்தனமாக இப்படி காவல்துறை நடந்து கொள்வதா? என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் போராட்டத்தில் கலந்து கொண்டார ப.சிதம்பரத்தின் விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு கை முறிவு ஏற்பட்டிருக்கிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நுழைந்து நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அதில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த அட்டூழியங்கள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது ஒரு ஜனநாயகத்தில் அனைத்து சட்ட உரிமைகளும் அரசியல் உரிமைகளும் மீறப்பட்டுள்ளன என சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மோசடி விவகாரத்தில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத் துறைக்கு எதிராக டெல்லியில் நடத்த போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் டெல்லி போலிசார் தங்கள் சட்டையை கிழித்து விட்டது என அழைக்கின்றனர். சண்டையில் சட்டை கிளிய தான் செய்யும் நீங்கள் ஏன் டெல்லி போனீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.