அப்போது விழா மேடையில் பேசிய நடிகர் சிவகுமார், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்தால் அவரின் பாதத்தை தொட்டு வணங்குவேன். ஏனென்றால் அவர்தான் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையும் அமைத்தார்.
கலைஞர் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் அவரின் காலை தொட்டு வணங்குவேன் என நடிகர் சிவகுமார் உருக்கமாக பேசியுள்ளார்.அவர்தான் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தவர் என்றும், கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு சிலை அமைத்தவர் என்றும் சிவக்குமார் நினைவு கூர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் அவர் மறைந்த பின்னும் மக்களால் பேசப்படு வருகிறது. அவர் செய்த பல்வேறு சமூக நலத் திட்டங்கள், சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை கலைய முன்னெடுத்த சமூகநீதி திட்டங்கள் இன்றளவும் மக்களால் வரவேற்கப்பட்டு வருகிறது. சமத்துவபுரம், பெண்களுக்கு சொத்துரிமை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு என ஏராளமான சமூக நலத்திட்டங்கள் அவர் செய்த சமூக நீதி ஆட்சிக்கு சான்றாக உள்ளது. அதேபோல் தமிழகத்தில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், கலை கலாச்சார சின்னங்கள் அவரின் சரித்திர சாதனைக்கு சான்றாக உள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நிறுவப்பட்ட வள்ளுவர் கோட்டம், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை போன்றவை அடையாளச் சின்னங்களாக உள்ளன.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் இணையக் கல்விக் கழகம், தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் விழா நடைபெற்றது. அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாடநூல் கழக தலைவர் ஐ லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீராக்காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரைந்த ஓவியக் கண்காட்சியின் அமைச்சர்கள் தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட ஓவியப் போட்டியில் 365 ஓவியர்கள் தேர்வு செய்யப்பட்டு, கண்காட்சியில் அவர்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டது. அதேபோல் திரைப்பட நடிகர் சிவகுமார் எழுதிய திருக்குறள் 50 என்ற நூலினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இன்று வெளியிட்டார். அப்புத்தகத்தை மனோ தங்கராஜ் பெற்றுக்கொண்டார். அதில் குறல் ஓவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அப்போது விழா மேடையில் பேசிய நடிகர் சிவகுமார், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்தால் அவரின் பாதத்தை தொட்டு வணங்குவேன். ஏனென்றால் அவர்தான் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையும் அமைத்தார். வள்ளுவர் கோட்டத்தையும், குமரியில் சிலையை நிறுவியவர் டாக்டர் கலைஞர் என்றார். மேடையில் புறநானூற்றுத் தாய் பற்றி கலைஞர் கருணாநிதி எழுதிய வசனத்தை முழுவதுமாக பேசிக் காட்டினார். அப்போது அரங்கில் இருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
