தமிழகத்தில் பென்னிகுயிக் விழா நடந்திருந்தால் ஓ பன்னீர் செல்வத்தை அழைத்திருப்போம் என லண்டனில் இருந்து திரும்பிய அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பென்னிகுயிக் விழா நடந்திருந்தால் ஓ பன்னீர் செல்வத்தை அழைத்திருப்போம் என லண்டனில் இருந்து திரும்பிய அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். லண்டனில் பென்னிகுயிக் சிலை திறப்பு விழா எலிசபெத் மரணத்தால் தடைபட்ட நிலையில் லண்டனில் இருந்து திரும்பிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் விவசாயத்திற்காகவும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொறியாளர் பென்னி குயிக் முல்லைப் பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டினார். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் முல்லைப் பெரியாறு அணை கம்பீரமாக நிற்கிறது. அந்த அணையை கட்டிய பொறியாளர் பென்னி குயிக்கிற்கு நன்றி பாராட்டும் வகையில் பிரிட்டன் கேம்பர்ளி நகரில் அமைந்துள்ள பூங்காவில் அவரது சிலை அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: நீட் தேர்வு தமிழக மாணவர்கள் தோல்வி...! தலையும் வாலும் புரியாமல் வழிகாட்டும் ஆளுநர்- முரசொலி தலையங்கம்

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய பொறியாளர் பென்னி குயிக்கின் சிலை அவரது சொந்த ஊரில் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை செப்டம்பர் 10ஆம் தேதி திறக்க தமிழக முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். சிலையை திறக்க தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி லண்டன் சென்றார் அவருடன் 5 சட்டமன்ற உறுப்பினர்கள்லண்டன் சென்றனர். இந்நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததால், அவரது சிலை திறப்பு விழா அங்கு நடைபெறவில்லை, ஐ.பெரியசாமி லண்டனிலிருந்து சென்னை திரும்பினார்.

இதையும் படியுங்கள்: எடப்பாடி கோட்டையில் சசிகலா..! இதற்கு அனுமதி வழங்கவே கூடாது... அதிமுக எம்எல்ஏ போலீசில் பரபரப்பு புகார்

அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பென்னிகுயிக்கின் சொந்த ஊரில் சிலை அமைக்க சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார், ஐந்து மாவட்ட விவசாயிகளின் குடிநீர் தேவைகளுக்காக விவசாய தேவைக்காகவும் தனது சொந்தப் பணத்தில் சிறந்த அணையை உருவாக்கியவர் பென்னி குவிக், எனவே அவரது பெருமையை சொந்த ஊரில் பறைசாற்றும் வகையில் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்நிலையில் லண்டன் கேம்பர்ளியில் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிலை திறப்பு விழா இன்று மக்கள் பார்வையிட்டுச் செல்லும் ஏற்பாடு செய்யப்பட்டது.

என்னுடன் 5 எம்எல்ஏக்கள் வந்திருந்தனர், மக்கள் பிரதிநிதிகள் விவசாயிகள் பங்கேற்றனர், லண்டன் திறப்பு விழா என்பதாலே பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் பென்னிகுயிக் என் சிலை திறப்பு விழா தமிழகத்தில் நடந்திருந்தால் நிச்சயம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு தரப்பட்டிருக்கும். பிற எம்எல்ஏக்கள் அவர்களது சொந்த செலவில்தான் வந்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.