தமிழக சங்கி கூட்டம்  அரசியல்-அதிகாரம்-பொருளாதார பலன் கிடைக்குமெனில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என பாஜகவினரை திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

கொரோனா பாதித்து குணமடைந்த நபரிடமிருந்து ப்ளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நபருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தப்லீக் மாநாட்டில் பங்கேற்று பின்னர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக வீடு திரும்பியவர்களின் இரத்தத்தில் உள்ள ப்ளாஸ்மா திரவம் தான் தற்போது நோயாளிகளை குணப்படுத்த போகிறது.  இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் ப்ளாஸ்மா அளிக்க இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். 

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த பலருக்கு தமிழகத்தில்  கொரோனா தொற்று பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிக பெரிய உதவியை நாம் அறிவோமா?  கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், 'ஊநீர்' தானம் செய்ய வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை வாழ்த்த, நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என பாஜக ஆதரவாளர் நாராயணன் திருப்பதி பாராட்டி உள்ளார். 

கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், (ஊநீர்) plasma ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை’’ என பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ’’அரேபியர்கள் இன்னும் வலிமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தால் ஒட்டுமொத்த ஆர்.எஸ்.எஸ் கூடாரமே முஸ்லீமாக மதம் மாறி இருக்கும்”அரசியல்-அதிகாரம்-பொருளாதார பலன் கிடைக்குமெனில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்கள் வரலாறு அப்படிப்பட்டது. இதை பார்த்தாவது தமிழக சங்கி கூட்டம் திருந்துமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.