ஸ்டாலினுக்கு அரசியல் ஞானம் இல்லை என்றும், ஏனோ தானோ என பாஜகவை பற்றி இனி ஸ்டாலின் பேசினால் அவருடைய பல்வேறு விவகாரங்களை நாங்கள் பேசுவோம் என்றும்,எப்போதும் அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் ஸ்டாலின் 1986 ல் இருந்து இன்று வரை என்னென்ன தொழில் செய்தார் என்பது குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலை ஒரு சேவையாக செய்யாமல் தொழிலாக செய்து வருகிறார் என முன்னாள் எம்.பி கே.பி.இராமலிங்கம் விமர்சித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம், கூறியதாவது. 2001 தேர்தலில் திமுக தான் பாஜகவிற்கு அடிபணிந்து இருந்தது,1999 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை பற்றி ஊருக்கு ஊர் புகழ்ந்து பேசினார் கருணாநிதி, அந்த பேச்சுக்களை எடுத்து கேட்டால் தற்போது பாஜகவை விமர்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்வார் என தெரிவித்தார். தற்போது விலைவாசி உயர்ந்துவிட்டது என பேசும் ஸ்டாலின் திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட விலையை மு.க.ஸ்டாலினால் வெளியிட இயலுமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், முதல்வர் தன்னை விவசாயி என கூறுவதை கேட்டு பொறாமைப்பட்டு வயித்தெரிச்சலில் உள்ளார் மு.க.ஸ்டாலின். அவருடைய தொழிலை அவர் கூறுகிறார். திமுக தலைவர் பொறுப்பற்றதனமாக, தான்தோன்றி தனமாக பரப்புரை மேற்கொண்டு பொய்களை பரப்பிவருகிறார். இன்னும் 5 ஆண்டுகளுக்கு உணவுப்பற்றாக்குறையே ஏற்படாத வண்ணம் மத்திய அரசும் மாநில அரசும் செயல்பட்டிருக்கிறது என பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஸ்டாலினுக்கு அரசியல் ஞானம் இல்லை என்றும், ஏனோ தானோ என பாஜகவை பற்றி இனி ஸ்டாலின் பேசினால் அவருடைய பல்வேறு விவகாரங்களை நாங்கள் பேசுவோம் என்றும், எப்போதும் அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் ஸ்டாலின் 1986 ல் இருந்து இன்று வரை என்னென்ன தொழில் செய்தார் என்பது குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அரசியலை சேவையாய் பார்ப்பதால்தான் எடப்பாடி பழனிச்சாமி தன்னை விவசாயி என சொல்கிறார், முதலமைச்சர் என சொல்லிக்கொள்ளவில்லை, ஆனால் அரசியலை தொழிலாக செய்பவர் ஸ்டாலின் அவருடைய வாழ்க்கையே ஒரு பொய்யான வாழ்க்கை, அவருடைய தோற்றமும் பொய்யான தோற்றம் எனவும் விமர்சித்தார். எட்டுவழிச்சாலை திட்டம் தவறான திட்டம் இல்லை என்றும் உத்தர பிரதேசத்தில் ராணுவ தளவாடத்திற்கு எட்டு வழி சாலை அமைத்து இருப்பதால் அங்கு தற்போது அந்த நகரமே வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும், தமிழகத்தில் எதிர்கட்சிகள் எட்டு வழி சாலையை வரவிடாமல் தடுத்து தமிழகத்தை வளர்ச்சி அடையாமல் செய்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினார். மேலும் திமுக ஆட்சியில் நான்கு வழிச்சாலை போட்டார்கள் இப்போது அவர்களே எட்டு வழிச்சாலையை எதிர்க்கிறார் எனவும் விமர்சித்தார்.
