தென்மாவட்டங்களில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளதால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக போட்டியிடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் கட்சி விரும்பினால் போட்டியிடப்போவதாகவும் அக்கட்சியின் மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்தவர் வசந்தகுமார். இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது தொகுதியான கன்னியாகுமரி தற்போது வெற்றிடமாக உள்ளது. இந்த நிலையில் பாஜக சார்பில் நயினார்நாகேந்திரன் இந்த தொகுதியின் மீது பார்வையை செலுத்தி வருகிறார். ஏற்கனவே போட்டியிட்டு பெற்றி பெற்று மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன்  காங்கிரஸ் கட்சியின் எம்பியான வசந்தகுமாரிடம் தோற்றுப்போனவர். ஆகையால் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் யார் என்கிற போட்டி பாஜகவில் பரபரக்கத் தொடங்கியுள்ளது.

பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜக எம்பிக்கள் யாரும் இல்லை என்கிற வருத்தம் பாஜகவிற்கு உண்டு. தமிழகத்தில்  பாஜக மத்திய அமைச்சராரக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதிக்கு பல ஆயிரம் கோடி நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். இந்த முறை தங்களது பிரதிநிதிகள் யாரும் இல்லாத நேரத்தில் தமிழகத்திற்கு கேட்டுப்பெற எந்த அமைச்சரும் இல்லை.

நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்த நேரத்தில் அவருக் குஅந்த பதவி கிடைக்காமல் எல்.முருகனுக்கு கைமாறியது. இதனால் விரக்தியில் இருந்த நயினார் திமுக அதிமுக போன்ற கட்சிகளுக்கு தாவப்போகிறார் என்றும் செய்திகள் பரவியது. உண்மையிலேயே மன வருத்தத்தில் இருப்பதாக நயினார் அதை உறுதி செய்திருந்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி இடைத்தேர்தல் வேட்பாளர் சீட் கிடைக்கவில்லை என்றால் அவரது நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பொருத்திருந்து தான் பார்க்க முடியும்.

 

இந்த நிலையில் திருநெல்வேலியில் 11 மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 03.09.2020 அன்று நடைபெற்றது.அதன்பிறகு மண்டல பொறுப்பாளரான நயினார்நாகேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர்..

"வரும் சட்டப்பேரவை தேர்தலில் சிறப்பான வெற்றிக்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணியில் போட்டியிட்டாலும் வெற்றிவாய்ப்பைப் பெறுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.தென்மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்.கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. அங்கு என்னைவிட மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். கட்சி தலைமை உத்தரவிட்டால் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன்.