மோடி தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் - சீமான் ஆவேசம்

ஒருவேளை தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். அப்பொழுது தான் நான் உண்மையாகவே பாஜகவை எதிர்க்கிறேன் என்பது அனைவருக்கும் புரியும் என்று சீமான் பேசியுள்ளார்.

if pm narendra modi will contest in tamil nadu for parliament election i will fight against him says seeman vel

திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் இல்ல திருமணவிழா நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, சீமான் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது, மேடையில் அரசியல் பேச வேண்டாம் என்று சொன்னார்கள். நாங்கள் சந்தர்ப்பத்திற்கு பேசுபவர்கள் கிடையாது. சத்தியத்தை பேசுபவர்கள். அரசியல் என்பது வாழ்வியல் அது இல்லாமல் எதுவும் கிடையாது.  அபுபக்கர் சித்திக் இந்து மதப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். சீமான் மதமாற்றுகிறார் என்று இந்துக்கள் கூட சொல்லவில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் தான் சொன்னார்கள். 

மாவட்ட அளவிலான பெண்கள் கபாடி போட்டி - சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய தூத்துக்குடி அணி

நேற்று பெரும்பான்மை, இன்று சிறுபான்மை?

நேற்று மணப்பெண்ணின் பெயர் வேறு அவருடைய மதம் வேறு, வழிபாடு வேறு. இன்று அவர் சைனப் அபிபா. நேற்று அவள் பெரும்பான்மை இன்றிலிருந்து அவள் சிறுபான்மை என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருதா இல்லையா? எனக்கு கோபம் வரனுமா இல்லையா? அதனால் தான் சிறுபான்மை என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்னேன். 

நான் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். என்னை சிறுபான்மை என்று சொல்பவன் மொழி சிறுபான்மை முட்டாப் பயலே எங்களை ஏன்? மொழிச்சிறுபான்மை, மதச் சிறுபான்மை என்று சொல்கிறீர்கள். மதம் மாறக்கூடியது. ஆனால் அவள் தமிழச்சி என்பதை மாற்ற முடியுமா? அவளின் மொழியும், இனமும் தமிழர் என்பதை மாற்ற முடியுமா? உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் இருங்கள். எனக்கு கோபம் வரும். நான் கோபக்கார தலைவனின் மகன். அப்படிதான் இருப்பேன். என் பிள்ளைகளும் அப்படித்தான் இருப்பார்கள். 

ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்க ஆன்லைனில் கடன்... சிக்கி கொண்ட காவலர்.! தற்கொலை முயற்சியால் பரபரப்பு

ஜிஎஸ்டியில் சிறுபான்மையினருக்கு சலுகை?

பெரியார் சொன்னது போல் நான் பேசுவதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்ளவும். கெட்டது இருந்தால் விட்டு விடுங்கள். 18% ஜிஎஸ்டியில் சிறுபான்மை மக்களுக்கு 10% ஜிஎஸ்டியா? விதிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பெரும்பான்மை சிறுபான்மை என்று பேசுவது. அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு சலுகைகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது. 

விடுதலை பெற்ற இந்தியாவின்  இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் பிரதமராக இருந்துள்ளார்கள். ஒன்றுக்கும் பயன்படாத ரப்பர் ஸ்டாம்பு பதவியை அப்துல் கலாமிற்கு கொடுத்தார்கள். இந்த நிலத்தில் சிறுபான்மையினருக்கு தேவைப்படுவது உரிமை. சலுகைகள் அல்ல. இந்த காயல்பட்டினம் திமுகவின் கோட்டை என்றார்கள். அந்த கோட்டையில் ஓட்டையை போட்டு என்னுடைய கோட்டையாக மாற்றக்கூடிய புரட்சியாளன் நான். எல்லாம் மாறும் நீங்கள் எங்கு சென்றாலும் நான் உங்கள் கூட தான் இருப்பேன்.

என்னை எப்போது நம்ப போறீங்க என்று தெரியவில்லை. ஒரு வேலை மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும். ஏனென்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். உண்மையிலே இவன் டப் தான் கொடுக்கிறான்.  சண்டைதான் போடுகிறான் என்று என்னை நம்புவீர்கள் என அவர் பேசினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios