Asianet News TamilAsianet News Tamil

நான் தனிக்கட்சி ஆரம்பித்தால்..!! அண்ணாமலை பரபரப்பு விளக்கம்.. செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி.

நான் கட்சி ஆரம்பித்தால் என் கட்சியை  நான் மட்டும் தான் நடந்தி கொள்ள வேண்டும், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, நமது பாரத ஜனதா கட்சியை பொறுத்தவரையில் எந்த ஒரு தனிமனிதனுக்கும் தனி சித்தாந்தம் கிடையாது

If I start a new party .. !! Annamalai description .. Action replay at the press meet.
Author
Chennai, First Published Nov 15, 2021, 10:35 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நான் தனிக்கட்சி ஆரம்பித்தால் அதை நான் மட்டும்தான் நடத்திக் கொள்ள வேண்டும், இதுபோன்ற பல விமர்சனங்கள் என்னைப் பற்றி வெளி வருகிறது ஆனால் எதையும் நான் கண்டு கொள்வதில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விரைவில் கொங்குநாடு ஜனதா கட்சி என்ற பெயரில் அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் அண்ணாமலை, தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் அம்மாநில இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற போலீஸ் அதிகாரியாகவும் இருந்தார். கர்நாடக மாநிலத்தின் ரியல் சிங்கம் சூர்யாவாக அவர் வலம் வந்தார்.

திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரில் ஆட்டு பண்ணை மாட்டு பண்ணை விவசாயம் எற களமிறங்கியதால் பலரின் கவனத்தையும் அவர் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தொடங்கயிருந்த புதிய கட்சியில் மாநிலத் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்படப் போவதாக தகவல் வெளியானது. பின்னர் தமிழக பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் வேலையை அவர் செய்து வந்ததாக கூறப்பட்டது. அப்போது அமித்ஷாவுடன் தொடர்பு ஏற்பட்டு அவரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்ட்டது.  அப்போது தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது, பின்னர் எல். முருகன் மத்திய இணை அமைச்சரான பின்னர் தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார்.

If I start a new party .. !! Annamalai description .. Action replay at the press meet.

இந்நிலையில் பல ஆண்டுகளாக பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களுடன் அவருக்கு ஒத்துப்போகவில்லை என்றும்,  அவரின் நடவடிக்கைகள் ஆர்எஸ்எஸ்சில் உள்ளவர்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது, அதேபோல சமூக வலைதளத்தில் தனக்கென தனி போன்ஸ் கிளப்பை உருவாக்கிய அவர், அதன்மூலம் தனது ஆதரவாளர்களை கட்சிக்குள்ளாகவே கட்டமைத்து வருகிறார் என அவர் மீது விமர்சனம் இருந்து வருகிறது. அதேபோல கட்சியில் தனக்கு ஒத்துழைப்பு இல்லை என்ற அவர் உணர்வதாகவும், இதனால் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றும் பல உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வெளியாக வந்தன, அண்ணாமலை அதிகசெல்வாக்கும் பெற்ற கோவை மண்டலத்தில் அவரது ஆதரவாளர்கள் கொங்கு நாட்டின் வருங்கால முதல்வரே என போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர், சமீபத்தில் கொங்கு நாடு தனிநாடு என்ற சர்ச்சை எழுந்தபோது, பாஜக கொங்கு மண்டலம் குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை, ஒன்றிய அரசு என திராவிட கட்சிகள் கூறி வருவதால் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவே கொங்குநாடு எனும் கோஷம் எழுப்பப்படுகிறது, ஆனால் மாநில மக்கள் விரும்பினால் அதற்கேற்றார்போல மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்திருந்தார், அது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில் பாஜக தொண்டர்களும் கொங்குநாடு எனும் முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.தற்போது மீண்டும் பாஜகவில் தனது ஆதரவாளர்கள் வட்டத்தை வலுப்படுத்திவரும் அண்ணாமலை விரைவில் " கொங்குநாடு ஜனதா கட்சி"  தொடங்க உள்ளார் என தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில்  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தனிக்கட்சி ஆரம்பிக்கும் செய்தியில் உண்மை இல்லை என கூறியுள்ளார். அதாவது சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட  அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது, வைகோ அவர்கள் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிற நபர்களின் நானும் வருவன், நான் அவரை சந்திக்கும் போதும் அதை வெளிப்படுத்தியிருக்கிறேன், தொடர்ந்த அவரது பேச்சுக்களை கேட்பேன் என அவரிடமே நான் தெரிவித்திருக்கிறேன், ஆனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அவர் மௌனமாக இருப்பது சரியல்ல, அவர் வாய் திறந்து பேச வேண்டும், இது 5 மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதார பிரச்சனை, குறிப்பாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செய்யும் நடவடிக்கைகளை பார்த்து வைகோ அவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும். இதை தான் நான் வலியுறுத்தியிருந்தேன், ஆனால் வைகோ அவர்கள் இதுகுறித்து யாரும் வாய் திறக்கூடாது, ஒரு போலீஸ்காரனுக்கு  என்ன தெரியும் என்று எல்லாம் அவர் கூறியிருக்கிறார். 

If I start a new party .. !! Annamalai description .. Action replay at the press meet.

ஆனால் அவர் மௌனம் கலைய வேண்டும் என்றுதான் நாங்களே கேட்கிறோம் என்றார், அப்போது, அண்ணாமலை விரைவில் கொங்குநாடு ஜனதா கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலுக்கு அவர், நான் கட்சி ஆரம்பித்தால் என் கட்சியை  நான் மட்டும் தான் நடந்தி கொள்ள வேண்டும், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, நமது பாரத ஜனதா கட்சியை பொறுத்தவரையில் எந்த ஒரு தனிமனிதனுக்கும் தனி சித்தாந்தம் கிடையாது, அண்ணாமலை ஆகிய நான் ஒரு சாதாரணவன், எனக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளதால் நான் தற்போது ஊடகங்களில் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான், என்னைப் பொறுத்தவரையில் இந்த கட்சிக்கு நான் என்ன செய்திருக்கிறேனோ அதைவிட அதிகமாக இந்த காட்சி எனக்கு கொடுத்திருக்கிறது. என்னை விட முக்கியமான தலைவர்கள் பல ஆண்டு காலமாக இந்த கட்சிக்கு  உழைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதோ அதே போல எனக்கும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நான் ஒரு சிறிய மனிதன், பெரிய காட்சியில் பெரிய பதவியில் இருக்கிறேன்.

இந்த எண்ணத்தில்தான் நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன், அதனால் ஊடகங்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள், சில ஊடகங்கள் தொடர்ச்சியாக என்னை குறிவைத்து இதுபோன்ற வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றன. யார் என்ன விமர்சனங்களை வைத்தாலும் அதை படித்துவிட்டு சிரித்துவிட்டு கடந்து போய்விடுகிறேன், எந்த ஊடகங்களில் மீதும் எனக்கு தனிப்பட்ட கருத்து கிடையாது, ஊடகங்கள் கருத்து சொல்வது சகஜம்தான் அதில் உண்மையான கருத்துக்கள் இருக்க வேண்டும், அந்த கருத்துக்கள் உண்மையா பொய்யா என்பதை நமது நடவடிக்கைகள் மூலம் மக்கள் புரிந்து கொள்வார்கள் என பதிலளித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios