அடித்தால் திருப்பி அடிப்பேன்.. யார் கைகால் பிடித்தும் பதவிக்கு வரல.. மாஸ் காட்டிய அண்ணாமலை.
அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் ஒன்றும் இயேசுநாதர் அல்ல, என்னை அடித்தால் நான் திருப்பி, அடிப்பேன் நான் தன்மானம் மிக்க அரசியல்வாதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் ஒன்றும் இயேசுநாதர் அல்ல, என்னை அடித்தால் நான் திருப்பி, அடிப்பேன் நான் தன்மானம் மிக்க அரசியல்வாதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கண்ணியமாக பேசினால் இந்த கட்சிக்கு நான் தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, என்றும் யாருடைய கைகாலைப் பிடித்து நான் அரசியலுக்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதிலும் பிடிஆர் பழனிவேல்ராஜனுக்கு எதிரான விமர்சனங்களே அதிகளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் அரசியலில் சாபக்கேடு அண்ணாமலை என பிடிஆர் கூறிய நிலையில், அண்ணாமலையோ அவர் எனது கால் செருப்பு கூட இணையாக மாட்டார் என்ற தொனியில் பதிலளித்துள்ளார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில்தான் சுதந்திர போராட்ட தியாகி பூலித்தேவனின் 306 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை டி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் புலித்தேவன் திருவுருவ படத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதையும் படியுங்கள்: சீமான், பெ. மணியரசன் BJPயின் கைக்கூலி.. பாஜகவுடன் இருந்தவன் உருப்பட்டது இல்ல.. சுப.வீரபாண்டியன்.
தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாமல் மத அரசியல் செய்து வருகிறார், கிறிஸ்த்தவ, இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்து சொல்வது போல இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூற வேண்டும், பிறகு அவர் பாஜகவை விமர்சிக்கட்டும் என்றார், அதேபோல், உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சி சரியில்லை என கூறுகிறார்கள், தமிழ்நாட்டை விட உத்திரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் நிகர வருமானம் அதிகரித்துள்ளது, முதலில் இதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் சொல்லட்டும்.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் என்னை பேசியதற்குத்தான் நான் அவருக்கு பதிலடி கொடுத்தேன், அவர் என்னை தமிழக அரசியலின் சாபக்கேடு என பேசியிருக்கிறார், பழனிவேல் தியாகராஜன் தாத்தா, தந்தை ஆகியோரை கூறி அரசியல் பேசி வருகிறார். அவரது மூதாதையர்கள் கிழக்கிந்திய கம்பெனியுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம் என பேசிய வரலாற்றை அவர் தெரிந்து கொண்டு பேச வேண்டும், நான் அரசியலில் இல்லாவிட்டால் ஆடு மாடு மேய்த்து வயலில் இறங்கி வேலை பார்க்க தயாராக உள்ளேன்,
இதையும் படியுங்கள்: ஆர்.பி உதயகுமாருக்கு பாடை கட்டுவேன் என்றதில், என்ன தப்பு..?? சீனுக்கு வந்த ஓபிஎஸ் 2வது மகன்..
ஆனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனாலோ, அல்லது முதலமைச்சராலோ வீட்டை விட்டு வெளியே வந்து என்னை போல் செய்ய முடியுமா? நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன், என்னை அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் ஒன்றும் இயேசு அல்ல, அடித்தால் திருப்பி அடிப்பேன். நான் தன்மானம் மிக்க அரசியல்வாதி, கனிவாகப் பேசினால் நான் இந்த கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, யாருடைய கைகால்களையும் பிடித்து நான் பதவிக்கு வரவில்லை, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.