எங்கள் தொழில் சினிமா தான். ஆனால் இங்கு சேவை செய்ய வந்துள்ளோம். மக்களுக்காக பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம். அரசியல் கார்ப்பரேட் தொழில் போல மாறியுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் சமக வேட்பாளர் கிச்சா ரமேஷ்க்கு வாக்கு சேகரித்தார். சௌகார்பேட்டை, யானை கவுனி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், ஒரு சிறிய கடையில் டீ குடித்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், மாற்றம் வேண்டும் என்று மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள். 52 ஆண்டுகள் திராவிட கட்சிகள் மக்களை கையேந்தும் நிலைக்கு வைத்துள்ளது.

எங்கள் தொழில் சினிமா தான். ஆனால் இங்கு சேவை செய்ய வந்துள்ளோம். மக்களுக்காக பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம். அரசியல் கார்ப்பரேட் தொழில் போல மாறியுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் அறிவிப்புகள் வருகின்றன. மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மக்கள் வாய்ப்பு கொடுத்தால் சிறந்த ஆட்சியை தர முடியும். 25ம் தேதி கோவையில் கமலஹாசனுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளேன். கருத்துக்கணிப்புகள் பொய்யாக இருக்கின்றன. இருந்தும் மக்கள் நீதி மையத்திற்கு 3 வது இடம் கொடுத்துள்ளனர். 8 சதவீதம் 20 சதவீதமாக மாறும். நல்ல தொரு ஆட்சி அமைப்போம். பொற்கால ஆட்சி அமைக்க போகிறோம். ஊழலற்ற தெளிவான ஆட்சி கொடுக்க போகிறோம்.

நானும் ராதிகா சரத்குமாரும் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டால் அந்த தொகுதியில் மட்டும் ஒட்டு மொத்த உழைப்பை போட வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது பண அரசியல் நடந்து கொண்டிருக்கிறது, எனவே அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ளும் நோக்கத்தில்தான் நாங்கள் போட்டியிடவில்லை. 1996ல் 40 தொகுதி கேட்டிருந்தால் கருணாநிதி கொடுத்திருப்பார். நான் அவ்வாறு செய்யவில்லை. எங்கள் கூட்டணியை வெற்றி பெறவைக்க வேண்டும் என்பதே இலக்கு.
