கீழே விழுந்தால் பெரிய செய்தியாகிறது; ஆனால் விழுந்துவிழுந்து வேலை செய்தால்... தமிழிசையின் நகைச்சுவை கருத்து!!

விழுந்துவிழுந்து வேலை செய்தால் அது செய்தியில் வராமல் தான் கீழே விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருவதாக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

if i fall down it comes as big news but not when i work hard says tamilisai soundararajan

விழுந்துவிழுந்து வேலை செய்தால் அது செய்தியில் வராமல் தான் கீழே விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருவதாக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் விழுந்துவிழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது. ஆனால் நான் கீழே விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருகிறது.

கீழே விழுவது என்பது இயல்பான ஒன்று. நன்மைகளை செய்ய ஆரம்பித்தால் நாட்டிற்கு ஆளுநரும், ஆட்டிற்கு தாடியும் எதற்கு என பேச ஆரம்பித்து விடுவார்கள். தெலங்கானாவில் ஏழை மாணவன் ஒருவன், என்னை தொடர்பு கொண்டு தனக்கு லேப்டாப் இல்லாததால் படிக்க முடியவில்லை. அதனால் தான் தனது சொந்த செலவில் லேப்டாப் ஒன்றை அந்த மாணவனுக்கு வாங்கி கொடுத்தேன்.

இதையும் படிங்க: நான் பெரியாரின் பேரன்!.. மக்கள் நலனுக்கு இதுதான் சரி! கூட்டணி குறித்து ஈரோட்டில் விளக்கம் சொன்ன கமல்ஹாசன் !!

அதன்பின் சில நாட்களுக்கு பின் பேசிய அந்த மாணவன், லேப்டாப் மூலம் நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறினார். எனவே உங்கள் வீட்டிலும் பயன்படுத்தாத லேப்டாப்கள் இருந்தால் அதனை தன்னிடம் கொண்டுவந்து கொடுங்கள். ஆளுநராக இருப்பதால் பல நன்மைகளை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்று சேவை செய்வது மன நிம்மதியை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம்... பறையடிக்க கற்றுக்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios