ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம்... பறையடிக்க கற்றுக்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ்!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பறை இசைத்து மகிழ்ந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பறை இசைத்து மகிழ்ந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்.27 ஆம் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உச்சகட்ட கோபத்தில் சிறுபான்மையினர்.. ‘அங்க’ மட்டும் தயவு செஞ்சு போகாதீங்க! அண்ணாமலைக்கு தடை போட்ட அதிமுக
அந்த வகையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், காவிரிக்கரை பகுதியில் அமைந்துள்ள கலைத்தாய் கலை பயிற்சிப்பள்ளி மாணவர்களின் தப்பாட்டம், சிலம்பாட்டம், சுருள்வாள் போன்ற வீர விளையாட்டுகளையும், நீர் மேலாண்மையை வலியுறுத்திய தட்டு விளையாட்டுகளையும் பார்வையிட்டு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவை கண்டித்து சென்னையில் பாஜக போராட்டம்!.. அறிவித்தார் அண்ணாமலை - எப்போது தெரியுமா.?
அப்போது மாணவர்களிடம் இருந்து பறை இசைக்க கற்றுக் கொண்ட அமைச்சர், பறை இசைத்து மகிழ்ந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அப்துல் சமது, கழக நிர்வாகிகள் மணி, மனோகர், கங்காதரன், நிறுவன தலைவர் மாதேஸ் ஆகியோரும் மாணவர்களும், விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் உடன் இருந்தனர்.