Asianet News TamilAsianet News Tamil

நான் தூக்கு மேடைக்கு அனுப்பபட்டால்... நான் ஆசீர்வதிக்கப்படுவேன்.! பாஜக பிரமுகர் உமாபாரதி அதிரடி டாக்.!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக தலைவர்களுள் ஒருவரான உமா பாரதி, ஒரு வேளை நான் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டால், நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறேன் என அர்த்தம் என அதிரடியாக பேசியுள்ளார்

If I am sent to the gallows ... I will be blessed.! BJP leader Uma Bharti's action attack!
Author
India, First Published Jul 25, 2020, 11:50 PM IST

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக தலைவர்களுள் ஒருவரான உமா பாரதி, ஒரு வேளை நான் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டால், நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறேன் என அர்த்தம் என அதிரடியாக பேசியுள்ளார்.

 பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தனது தரப்பு வாதத்தினை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு வாயிலாக சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.

If I am sent to the gallows ... I will be blessed.! BJP leader Uma Bharti's action attack!

இந்த வழக்கிலிருந்து ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்பளித்திருந்தது. பின்னர் இந்த தீர்ப்பினை அலகாபாத் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் போக்கை மாற்றி, விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லையெனக் கூறி மீண்டும் வழக்கை உயிர்பித்தது. இந்த வழக்கை மறு விசாரணையாக தினந்தோறும் நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பினை ஆகஸ்ட் 31 க்குள் வழங்க வேண்டும்.ஆகையால் இந்த வழக்கு விரைவாக நடைபெற்று வருகிறது.

If I am sent to the gallows ... I will be blessed.! BJP leader Uma Bharti's action attack!

சில நாட்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், "ராமர் கோயிலைக் கட்டினால் கொரோனா போய்விடும் என சிலர் கருதுகின்றனர்." என்று விமர்சனம் செய்திருந்தார்.இது குறித்து உமா பாரதி கருத்து தெரிவிக்கயைில் “இரண்டு விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஒரு முழு அமைப்பும் கொரோனா உடன் போராடுகிறார்கள். சுகாதார அமைப்பு தனி, கோயிலை கட்டியெழுப்பும் அமைப்பு தனி. சரத்பவாரின் கருத்துகளில் நான்வேறு அர்த்தத்தைக் காண்கிறேன். சிலர் இவை அனைத்தும் அதிக பிரச்சனை இல்லாமல் நடக்கிறது என்று கவலைப்படுகிறார்கள். மோடி-ஜி அயோத்தியில் இருக்கும்போது 'ஸ்ரீ ராம் ஜெய் ராம்' பாடுமாறு பவார்-ஜியை நான் கேட்க விரும்புகிறேன்." என உமாபாரதி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios