திமுக- அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, வெளியில் தகவல் சொல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவர், மத்திய அமைச்சர் எல்லாம், உடல் நலம் விசாரித்தார்கள். அமைச்சர் அன்பழகன் ஐ.சி.யு.,வில் 'அட்மிட்' ஆன பிறகுதான், அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. 

அடுத்து, மின் துறை அமைச்சர் தங்கமணி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இருவரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.அமைச்சர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அதை வெளியில் சொல்லாமல் சிகிச்சை கொடுக்க மேலிடத்தில் இருந்து, உத்தரவு போட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

 

அமைச்சர்கள், முன்னெச்சரிக்கையாக இல்லையா என மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் இப்படி மறைப்பதாக கூறுகிறார்கள். திமுக ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தை அறிவித்து எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் மக்களை சந்தித்ததால் தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக ஆளும்கட்சி விமர்சனம் செய்தது. அதே விமர்சனத்தை தற்போது எதிர்கட்சியும் முன் வைக்கலாம் என்பதால் இப்படி மறைக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டதாக கூறுகிறார்கள்.