Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகிவிடுவேன் - எம்.பி.மாணிக்கம் தாகூர் சவால்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 40 தொகுதிகளையும் கைப்பற்றினால் நான் அரசியலை விட்டு செல்வதாக விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சவால் விடுத்துள்ளார்.

if bjp will win all parliament seats in tamil nadu i will windup from politics said mp manickam thagore in virudhunagar vel
Author
First Published Feb 24, 2024, 6:11 PM IST

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் காமராஜரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார், காமராஜர் இல்லத்தில் இருந்து என்னுடைய சட்டமன்ற குழு தலைவர் பணியை தொடங்குகிறேன். சட்டமன்ற குழு தலைவராக என்னை நியமித்த ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

கணவரின் ஓரினச்சேர்க்கையால் ஒரே மாத்தில் முடிவுக்கு வந்த இல்லற வாழ்க்கை; கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

மேலும் பேசிய ராஜேஷ் குமார் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள். தொகுதி அளவில் உள்ள பிரச்சினைகளை மட்டுமே பேசி வந்த நான் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பிரச்சினையை பற்றி  பேசுவேன். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக நவோதயா பள்ளி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் தற்போது ஆட்சி முடியும் நேரத்தில் அதை பற்றி பேசுகிறது. இது வெறும் பேச்சாக மட்டுமே இருக்கும் தவிர செயல்பாட்டுக்கு வருவதில்லை. மத்திய அரசு பல திட்டங்களை கூறிவிட்டு நல்ல திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ளது.

பிரதமர் மோடி ஏற்கனவே பலமுறை வந்து சென்ற நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அதே போன்று இந்த முறையும் எந்தவித மாற்றமும் ஏற்படாது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மதிப்பளிக்க கூடிய அளவில் தொகுதிகள் கிடைக்கும் என்றார்.

அதனை தொடந்து செய்தியாளர் களிடம் பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பாஜக, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தது. அந்த மாநிலங்களில் எல்லாம் மது ஒழிக்கப்பட்டு விட்டதா? அண்ணாமலையை பொருத்த வரையில் தொடர்ந்து புரளிகளை மட்டுமே சொல்லி வரும் அண்ணாமலை எப்போதுதான் உண்மையை பேச போகிறார்?

சேலத்தில் சயனைடு கலந்த மதுவை குடித்த ஒருவர் பலி; ஒருவர் கவலைக்கிடம் 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 40 தொகுதிகளையும் கைப்பற்றினால் நான் அரசியலை விட்டு செல்கிறேன். அதேபோல் 40 தொகுதிகளை பாஜக கைப்பற்றாவிட்டால் மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியலை விட்டு செல்வாரா ? மத்தியில் இந்தியா கூட்டணி அரசு ஆட்சி அமைக்கும் போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்கப்படும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீட்டை பற்றிய அறிக்கை தெளிவாக இருக்கும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios