Asianet News TamilAsianet News Tamil

கணவரின் ஓரினச்சேர்க்கையால் ஒரே மாத்தில் முடிவுக்கு வந்த இல்லற வாழ்க்கை; விரக்தியில் 3 பேர் தற்கொலை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3 persons in a same family commit suicide in coimbatore vel
Author
First Published Feb 24, 2024, 3:09 PM IST

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோடு, ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 65). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவி விமலா (55). இவர்களுக்கு தியா காயத்ரி (25) என்ற மகள் இருந்தார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களின் சொந்த ஊர் கேரளா ஆகும். காயத்ரிக்கும், கோவை வடவள்ளியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் தீட்சித் என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமானதும் இருவரும் பெங்களூருவில் தங்கி இருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் திருமணமான ஒரு மாதத்திலேயே கடந்த டிசம்பர் மாதம் காயத்ரிக்கும், அவருடைய கணவர் தீட்சித்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கோபித்துக்கொண்டு காயத்ரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. 

இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதென்றால் அதற்கு மோடி தான் காரணம் - அண்ணாமலை பேச்சு

திருமணமான ஒரு மாதத்திலேயே தனது மகள், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக வீட்டிற்கு வந்தது பெற்றோருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மனமுடைந்த தந்தை கணேசன், தாய் விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் 3 பேரும் கடந்த 21ம் தேதி கேக்கில் விஷத்தை தடவி அதை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்யும் முன்பு கணேசன் கோவையில் உள்ள தம்பியை தொடர்புகொண்டு மகளின் நிலை குறித்து மிகுந்த வேதனையுடன் தெரிவித்து உள்ளார். அதன்பிறகு அவர் தொடர்புகொள்ளவில்லை.

இதையடுத்து கணேசனின் தம்பி அண்ணனின் செல்போனுக்கு பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் எடுக்காததால் சந்தேகத்தில் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் கணேசன், விமலா, காயத்ரி ஆகியோர் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து உடனே கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக உதவி கமிஷனர் நவீன்குமார், இன்ஸ்பெக்டர் ராஜேஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு பிணமாக கிடந்த கணேசன், விமலா, காயத்ரி ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அவர்களின் தற்கொலைக்கு காரணம் மகள் தியா காயத்ரி கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வந்ததாலும், பெற்றோருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு காரணமாகவும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios