திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலையை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பாஜக வினர் அகற்றினர்

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருந்தார் பாஜக தேசிய  செயலாளர் எச்.ராஜா..

அதில் லெனின் சிலையை இன்று திரிபுராவில் அகற்றியது போலவே,நாளை  தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என தெரிவித்தார்.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,மற்றும் பொதுமக்கள்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர்...

அதில் குறிப்பாக நாம் தமிழர் கட்சி சீமான்,விடுதலை சிறுத்தைகள் கட்சி  தொல்.திருமாவளவன்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,தினுக செயல்தலைவர்  ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்,...

இதில் யார் யார்எப்படி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள் என்பதை பார்க்கலாம்..

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

பெரியார் சிலை மீது கை வைக்க யாருக்கும் அருகதை கிடையாது

திருமாவளவன் எச்.ராஜாவின் முப்பாட்டனார் வந்தால் கூட,பெரியார் சிலை மீது கை வைக்க முடியாது...

சீமான்

பெரியார் சிலை மெது கை வைக்கட்டும்... அப்புறம் தெரியும் நாங்க  யாருன்னு...

மதிமுக வைகோ...

ஒரு படி மேலே சென்று,பெரியார் சிலை மீது கை வைத்தால் கை கால்கள் துண்டு துண்டாக்கப்படும்..ஏற்கனவே  தன் கை அருவா பிடித்த கைதான் என எமோஷனலாக  பேசினார் ...

ஒரு கட்டத்தில் பெரும்பான்மையாக எதிர்ப்பு கிளம்பியதால்,எதற்கு வம்பு என  தன்னுடைய  பதிவை  முகநூல் பக்கத்திலிருந்து  நீக்கினார் எச்.ராஜா