வருமான வரி கட்டுவதாலேயே கறுப்புப் பணம் சட்டபூர்வம் ஆகி விடுமா? இன்று பலரது மனத்திலும் நிற்கும் கேள்வி இதுதான். காரணம், இன்று ஜெயா டிவி., ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றை நிர்வகித்து வரும் விவேக் ஜெயராமன் கூறியவை அப்படிச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. 

கடந்த 5 நாட்களாக, சசிகலா குடும்பத்தினரக் குறிவைத்து நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் பல்வேறு ஆவணங்கள்  சிக்கின. கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஜெயா டிவி., மற்றும் ஜாஸ் சினிமாஸில் நடைபெற்ற சோதனைகள் குறித்துக் கூறிய விவேக், யாரு தப்பா காசு சம்பாதிச்சிருந்தாலும் ஐ.டி. கட்டியாகணும்... என்றார்.   

இதற்கு வருமான வரித்துறை சட்டம் என்ன சொல்கிறது. வருமான வரி கட்டுவதாலேயே கறுப்புப் பணம் சட்டபூர்வமாகிவிடாது என்பதுதான்.  

அவ்வாறு கண்டறியப் பட்டால், வருமான வரித்துறை நூறு சதவிகிதம் அதனை பறிமுதல் செய்வதோடு அல்லாமல், சிறைத் தண்டனையும் கொடுக்க வருமான வரித்துறைச் வட்டத்தில் இடம் உண்டு
.

மேலும், ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of corruption act), Indian civil code, நிதி முறைகேடு, அன்னியப் பண பரிவர்த்தனை முறைகேடு (FEMA violation) என இருந்தால், அந்த அந்தத் துறைகள் நடவடிக்கை எடுக்கும்.


வருமான வரித்துறை கணக்கில் வராத வருமானத்துக்கு வரி போடுவதுடன் அல்லாமல் , கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு மாற்றி விடும்.  இந்தக் கோப்புகளின் படி,

 பினாமி சட்டம் மற்றும் மேற்கூறிய சட்டங்கள் பார்த்துக் கொள்ளும். அதனால், விவேக் சொல்வது போல், யார் தப்பா காசு சம்பாதிச்சாலும், வரி கட்டியாகணும்... அட... நான் எப்படி சம்பாதித்தால் என்ன..? வரி கட்டி விட்டேன், வரி கட்டி விடுகிறேன் என்றெல்லாம் சொல்லி இந்தப் பணத்துக்கு புண்ணியம் தேட முடியாது!