நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுகள் அண்மைக்காலமாக மிக மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பேச்சுகள் தற்போதெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்குஉள்ளது.

அண்மையில் மறைந்த முத்லமைச்சர் ஜெயலலிதா குறித்து சீமான் பேசியது அதிமுகவினரை மட்டுமல்லாமல், சாதாரண பொது மக்களைக் கூட கொந்தளிக்க வைத்தது.

இந்நிலையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், தமிழனுக்கு தமிழ் தெரியவிலை என்றால் அவன் ஒரு ஈனப்பிறவி என்றும் தமிழ் தெரியாத தமிழனை செருப்பால் அடிப்பேன் என்றும் காட்டமாகப் பேசினார்.

தாய் மொழி மறந்தவனை நான் மனிதனாகவே மதிப்பதில்லை என்றும், ஒருவன் தனது சொந்த இனத்தை விட்டுவிட்டு இனம் மாறினால் அவன் இனதுரோகி என்றும் பேசினார்.

அதே நேரத்தில் ஒருவன் வாழ்வதற்காக இனம் மாறினால் கூட நான் பொறுத்துக் கொள்வேன், தமிழகத்தை ஆள வேண்டும் என இனம் மாறினால் இதை எனது உயிரைக் கொடுத்தேனும் தடுப்பேன் என கூறினார்.

ரஜினியைப் போன்று நான் போராட்டத்துக்கு எதிரி இல்லை என்றும், நியாயமான பிரச்சனைக்காக நாம் இணைந்து போராட வேண்டும் என தெரிவித்த சீமான், தமிழன் காசு வேணும், ஆனால் தமிழ் வேண்டாம் என யாராவது சொன்னால் நான் சும்மாவி மாட்டேன் என குறிப்பிட்டார்.