நேற்று வெளியானதாக கூறப்படும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இலவசமாக வாஷிங் மெஷின், ஆண்களுக்கு மானிய விலையில் மோட்டார் பைக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

நேற்று வெளியானதாக கூறப்படும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இலவசமாக வாஷிங் மெஷின், ஆண்களுக்கு மானிய விலையில் மோட்டார் பைக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், அப்படி இலவசமாக கொடுத்தால் ஊழல் தலைவரிவித்தாடும். இனியாவது இரு கட்சிகளும் ஆக்கப்பூர்வமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தமிழகத்தை உயர்ந்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி, ‘’எந்த இலவசமும் வேண்டாம். சிலிண்டர் ரூ300க்கும். பெட்ரோல் ரூ45க்கும். தேர்தல் அறிக்கை கையால் எழுதித்தந்தால் எழுதிக் கொடுப்பவர்கள் கை எளிதாக வெற்றி பெற முடியும்.

ஒருதேசநலன் சார்ந்த கட்சியின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும்.? அனைத்து தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு இலவசமாக அல்லாமல் குறைந்தபட்ச கட்டணத்தில் தனியாக பேருந்து வசதி செய்யப்பட வேண்டும். மக்களை கடுமையாக பாதிக்காத வகையில் அரசின் நிதி ஆதாரங்களை பெருக்குவது பற்றிய தரமான திட்டமிடலுடன் கூடிய வழிவகையை சொல்ல வேண்டும்.

ஆடு, மாடு வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு வருடம் தோறும் சிறப்பு கவனிப்புகளை பரிசுகளை வழங்க வேண்டும். ஏனெனில் அவற்றில் இருந்துதான் நம் அன்றாட தேவைகள் தொடங்குகிறது. மற்றும் அவற்றின் கழிவுகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும். மனித அன்றாட வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் கனிமவள கொள்ளைகளை தடுக்கும்விதமாக தொழிற்சாலைகளை முறைப்படுத்துதல் மற்றும் குறிபிட்ட காலத்திற்கு பின்பு அவற்றினை இட மாற்றம் செய்யும் வகையில் சட்டம் இயற்றவேண்டும்.

மதுக்கடைகளின் எண்ணிக்கையை மிகவும் குறைத்து பனை, தென்னையில் இருந்து கள் இறக்குவதை ஊக்கப்படுத்த வேண்டும். அவற்றில் கலப்படத்தை தடுக்க ஒரு குழுவினை அமைக்க வேண்டும். வருடாவருடம் நீர்நிலைகளை 75% ஊழல் இல்லாமல் தூர்வாரி நிரந்த நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும். தரமான மருத்துவத்தை குறைந்த விலையில் அரசே கொடுக்க வழி வகை செய்ய வேண்டும்.

அரசின் செலவில் கட்டப்படும் அனைத்து கட்டுமானங்களையும் 95% தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவற்றை பராமரிக்க தனி துறையை உருவாக்க வேண்டும். மக்களின் வருமானத்தை பெருக்க, இயற்கை சார்ந்த தொழிற்கூடங்களை ஆங்காங்கே உருவாக்க வேண்டும். அரசு ஊழியர்கள் இரண்டாவது முறை லஞ்சம் வாங்கும்போது அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

குடி நீரை தங்கத்திற்கு இணையாக நினைக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதை இலவசமாக முறையாக வழங்க வேண்டும். ஊருக்கு ஒரு நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதையும், அதை சிறப்பான முறையில் மக்கள் பயன்படுத்த அவர்களை ஊக்கப்படுத்தும் திட்டம் கொண்டு வர வேண்டும். தொடர்ச்சியான நிதி ஆதாராத்திற்காக, எந்த பொருளையும் இலவசமாக வழங்காமல், குறைந்தபட்ச விலை வைத்தே வழங்கப்பட வேண்டும். வருடம் தோறும் ஒரு லட்சம் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும்’’ என பலரும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.