Asianet News TamilAsianet News Tamil

நான் அத்வானியிடம் பாடம் படித்தவன்...!! டெல்லிக்கு போகும்போதெல்லாம் பாஜகவுக்கு சோப்பு போடும் வைகோ..!!

ஒவ்வொரு நாளும் இந்த அவையின் நடவடிக்கைகள் நிறைவு பெறுகின்ற வரையிலும், அவர் இங்கேதான் இருப்பார். அதேபோன்ற மற்றொரு ஆளுமை பேராசிரியர் என்.ஜி.ரங்கா. இந்த அவையின் உறுப்பினர்களாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், லால்கிஷன் அத்வானி ஆகியோரிடம் பல பாடங்களைக் கற்று இருக்கின்றேன். நையாண்டிகளாலும், நகைச்சுவைத் துணுக்குகளாலும், ஒட்டுமொத்த அவையை மட்டும் அல்ல, மாண்புமிகு பிரதமர் இந்திரா காந்தி அவர்களையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்த ஆளுமை பிலுமோடி.

iam student of atel bihari wajbei and advani -  vaiko speech at parliament
Author
Delhi, First Published Nov 19, 2019, 4:43 PM IST

மாநிலங்கள் அவையின் 250 ஆவது கூட்டத் தொடர், நேற்று (18.11.2019) தொடங்கியது. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அதில் ஆற்றிய உரை வருமாறு:- “ மாநிலங்கள் அவையின் 250 ஆவது கூட்டத்தொடரில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்த நாளில், உரை ஆற்றுகின்ற வாய்ப்பினை நல்கிய பேரவையின் தலைவருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை, திருக்குறளில், நன்றி என்னும் அதிகாரத்தில், 
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது  என்ற, கருத்தைத் தருகின்றார். 

iam student of atel bihari wajbei and advani -  vaiko speech at parliament

ஒருவர் பிரதிபலன் எதிர்பாராமல் செய்கின்ற உதவிதான் சிறப்பானது. அதனுடைய நன்மையைக் கருதுகின்றபோது, அது அலைகடலினும் பெரிது என்று, ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.  1978, 1984, 1990 ஆகிய ஆண்டுகளில், மாண்புமிகு இந்த அவையின் உறுப்பினராக நான் இடம் பெறுவதற்கு வாய்ப்பு அளித்த தி.மு.க. தலைவர், தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, எந்நாளும் நான் நன்றிக்கடன் பட்டு இருக்கின்றேன். அதேபோல, நான்காவது முறையாக என்னை இந்த அவைக்கு அனுப்பி இருக்கின்ற, தி.மு.க. தலைவர்  தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அவையில் என்னை வார்ப்பித்த ஆசான் முரசொலி மாறன் அவர்களையும் நினைவு கூர்கின்றேன். 

iam student of atel bihari wajbei and advani -  vaiko speech at parliament

இதற்கு முன்பு 18 ஆண்டுகள் இந்த அவையில் உறுப்பினராக இருந்தபொழுது, சிங்கத்தின் சீற்றத்துடன் முழங்கிய பூபேஷ் குப்தா அவர்கள் ஆற்றிய உரைகள் என்னைக் கவர்ந்தன. ஒவ்வொரு நாளும் இந்த அவையின் நடவடிக்கைகள் நிறைவு பெறுகின்ற வரையிலும், அவர் இங்கேதான் இருப்பார். அதேபோன்ற மற்றொரு ஆளுமை பேராசிரியர் என்.ஜி.ரங்கா. இந்த அவையின் உறுப்பினர்களாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், லால்கிஷன் அத்வானி ஆகியோரிடம் பல பாடங்களைக் கற்று இருக்கின்றேன்.நையாண்டிகளாலும், நகைச்சுவைத் துணுக்குகளாலும், ஒட்டுமொத்த அவையை மட்டும் அல்ல, மாண்புமிகு பிரதமர் இந்திரா காந்தி அவர்களையும் வாய்விட்டுச் சிரிக்கவைத்த ஆளுமை பிலுமோடி. 

iam student of atel bihari wajbei and advani -  vaiko speech at parliament

இந்த அவையில் நான் உரை ஆற்றிய பொழுதுகளில் எல்லாம், கட்சி எல்லைகளைக் கடந்து, அனைவரும் என்னைப் பாராட்டி ஊக்குவித்தனர். மக்கள் அவையில் நிறைவேறிய மசோதாக்களில் குறைகள் இருந்தால், அவற்றைச் சீர்படுத்தும் மன்றமாக இந்த அவை திகழ்கின்றது. மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களை, மாநிலங்கள் அவை தோற்கடித்து இருக்கின்றது. பல மசோதாக்களில் மாற்றங்களைச் செய்து இருக்கின்றது. மிக முக்கியமாக, 1978 ஆம் ஆண்டு, அரசியல் சட்டத்தின் 44 ஆவது திருத்தத்தையே மாநிலங்கள் அவைதான் முன்மொழிந்தது. 

iam student of atel bihari wajbei and advani -  vaiko speech at parliament

இந்த அவையில் நான் இருந்த நாள்களே, என்னுடைய வாழ்நாளின் பொற்காலம். என்னுடைய ஒரே விருப்பம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை போல, இந்த மேலவையும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பை வழங்குகின்ற வகையில், சமமான உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்டதாக அமைய வேண்டும் என்பதுதான். அந்தக் கனவு நனவாகும் நாள் வரும் என்று உறுதியாக நம்புகின்றேன். அப்பொழுதான் கூட்டு ஆட்சித் தத்துவம் வலுப்பெறும். மக்கள் ஆட்சியின் மாண்புகள் மேன்மை பெறும். அனைவருக்கும் நன்றி.”வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios