18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற பதிவாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தினகரைன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் வழக்கை 3-வது நீதிபதியாக விமலா விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதில் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தங்க தமிழ்ச்செல்வன் தவிர 17  பேர் தொடுத்த வழக்கில் 3-வது நீதிபதியா சத்யநாராயணன் விசாரிப்பார் என உச்சநீதிமன்றம் என  தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என 18 பேரின் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் 18 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றி இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.