18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. 3-வது நீதிபதியான சத்தியநாராயண நாளை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதி நீக்கத்து எதிரான வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 2 நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் வழக்கை 3-வது நீதிபதியாக விமலா விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தங்க தமிழ்ச்செல்வன் தவிர 17  பேர் வழக்கு தொடுத்தனர். நீதிபதி விமலாவுக்கு பதிலாக 3-வது நீதிபதியாக சத்யநாராயணன் விசாரிப்பார் என உச்சநீதிமன்றம் என  தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என 18 பேரின் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளித்திருந்தது  குறிப்பிடத்தக்கது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.