தருமபுரம் ஆதினத்தின் பட்டிண பிரவேசத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தருமபுரம் ஆதினத்தின் பட்டிண பிரவேசத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது ஆதீனகர்த்தராக பதவியேற்ற ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வெள்ளிப் பல்லக்கில் அமரந்து வீதி உலா வந்தார். அந்த பல்லக்கை ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்து வந்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சென்றவரை, அங்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வெள்ளி பல்லக்கில் அமரசெய்து பட்டினப் பிரவேசம் செய்யவைத்தனர். அதே போலவே காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோயிலிலும் நடைபெற்றது. இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு பாஜக, பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில் தருமபுரம் ஆதினத்தின் பட்டிண பிரவேசத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்குவது அந்த காலத்தில் வாகன வசதி இல்லாத நேரத்தில் தூக்கினார்கள். தற்போது மனிதனை மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டிணப் பிரவேசம் என்பதே நான் ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள். தருமபுரம் ஆதீனத்தில் பெருவிழா நடைபெறுவதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் மனிதனை மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. மற்ற விழாக்களை நடத்திக் கொள்ளலாம். மதுரை ஆதீனமும், பொன்னம்பல அடிகளாரோ பல்லக்கில் போவார்களா? நிச்சயம் போக மாட்டார்கள். இலங்கை தமிழர்களுக்கு உதவ நாம் தமிழர் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை திரட்டிக் கொண்டு இருக்கிறோம். அதை முறைப்படி கொண்டுபோய் சேர்ப்போம். தமிழக அரசு இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவது இலங்கை தமிழர்களுக்கு போய் சேரும் என்பதை உறுதி செய்ய வேண்டும். சிங்களர்களுக்கு செல்வதை நாங்கள் தடுக்கவில்லை. அதே நேரத்தில் தமிழர்களுக்குப் செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்று தெரிவித்தார்.